Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்,  நாங்குனேரி-627108, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4635-250 119 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்)
தாயார் வரமங்கை தாயார்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சேற்றுத்தாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வானமாமலை என்னும் திருவரமங்கை
ஊர் நாங்குனேரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தபோது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். “மாசு கழுவப்பெற்றாய்என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.

அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில், திருக்குறுங்குடி

அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில் திருக்குறுங்குடி-627 115, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைஷ்ணவ நம்பி
தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார்
தீர்த்தம் திருப்பாற்கடல், பஞ்சதுறை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்குறுங்குடி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். ஒரு முறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை முற்றி மனிதனைச் சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.