Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்
அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்– 609 801, திருவாரூர் மாவட்டம்.
+91-4366-233 041, 233 826 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள் |
உற்சவர் | – | கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி |
தாயார் | – | திருமாமகள் நாச்சியார் |
தல விருட்சம் | – | வில்வ மரம் |
தீர்த்தம் | – | திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம் |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | சலசயனம், பாலவியாக்ரபுரம் |
ஊர் | – | திருச்சிறுபுலியூர் |
மாவட்டம் | – | திருவாரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இத்தலப் பெருமாளை நோக்கித் தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த சயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை-610104, திருவாரூர் மாவட்டம்.+91-92454 89881 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் |
உற்சவர் | – | பெரும் புறக்கடல் |
தாயார் | – | கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) |
தல விருட்சம் | – | மகிழ மரம் |
தீர்த்தம் | – | தர்ஷன புஷ்கரிணி |
பழமை | – | 2000-3000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | இலட்சுமி வனம் |
ஊர் | – | திருக்கண்ண மங்கை |
மாவட்டம் | – | திருவாரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி, இத்தலம் வந்து பெருமாளை அடையத் தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்துத் தர சொன்னார். பின் இலட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ, பெருமாள் இங்கு வந்து இலட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு “பெரும்புறக்கடல்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இலட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு “லட்சுமி வனம்” என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் “கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்” என்ற பெயரும் ஏற்பட்டது.