Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம்

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் – 628 752, திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் மாயக் கூத்தர்
தாயார் அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்
தீர்த்தம் பெருங்குளத்தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குளந்தை
ஊர் பெருங்குளம், திருக்குளந்தை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்துத் தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாகத் தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மசாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்சவராகப் பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர்

அருள்மிகு வைத்தமாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவதிருப்பதி) திருக்கோளூர் – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தமாநிதிபெருமாள்
உற்சவர் நிஷோபவித்தன்
தாயார் குமுதவல்லி நாயகி , கோளூர் வல்லி நாயகி
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்கோளூர்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய்ச் சேருகின்றன. நாராயணன் இந்த நிதிகளைப் பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதிஎன்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தலப் பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளைப் பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலப் பெருமாளுக்கு அதர்மபிசுனம்என்ற பெயரும் உண்டு. இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.