தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91- 94439 86996

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலக் கூத்தன்)
உற்சவர்
அம்மன் உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம் தில்லைமரம்
தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோயில்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லைவனக் காட்டில் உள்ள சுயம்பு இலிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து, மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள இலிங்கத்தைத் தினமும் பூஜை செய்தார்.

யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி – நாகர்கோயில்

அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4652- 275 230 , 94871 01770

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.

மூலவர் யோகீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புத்தேரி, நாகர்கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு பூலா உடைய கண்டன் சாஸ்தாஎன்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்என்றும் பெயர் சூட்டினர். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.