எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர்
அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எயிலிநாதர் (திருவேலிநாதர்) | |
அம்மன் | – | சுந்தரவல்லி | |
தல விருட்சம் | – | வன்னிமரம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நன்செய் இடையாறு, பரமத்திவேலூர் | |
மாவட்டம் | – | நாமக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என ஆணவம் மிகுந்து சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் மனித உடலும், மிருக தலையும் கொண்ட மிருகம் ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலா” என கதறிக்கொண்டே ஓடினான்.
எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி
அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், எமனேஸ்வரம் – பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.
+91- 94860 13533
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எமனேஸ்வரமுடையார் | |
உற்சவர் | – | பிரதோஷநாயனார் | |
அம்மன் | – | சொர்ணகுஜாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | எமதீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | எமனேஸ்வரம் | |
ஊர் | – | பரமக்குடி | |
மாவட்டம் | – | ராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக்காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.
திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.