ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர்
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர், வேலூர் மாவட்டம்.
+91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஜலகண்டேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் | |
அம்மன் | – | அகிலாண்டேஸ்வரி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | கங்காபாலாறு, தாமரை புஷ்கரணி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேலங்காடு | |
ஊர் | – | வேலூர் | |
மாவட்டம் | – | வேலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் இலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், இலிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. இலிங்கத்தைப் புற்று மூடிவிட்டது. பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள இலிங்கத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு “ஜலகண்டேஸ்வரர்” என்று பெயர் ஏற்பட்டது.
இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர்
அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.
+91-94441 64108
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன் – மரகதாம்பிகை, மரகதவல்லி
தல விருட்சம் – வில்வம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் – திருநின்றவூர்
மாவட்டம் – திருவள்ளூர்
மாநிலம் – தமிழ்நாடு
நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த இலிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை.