Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை

அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை, வேலூர் மாவட்டம்.

+91- 97901 43219, 99409 48918.

காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி சிவனைத் தரிசிக்கலாம்.

மூலவர் கவுதமேஸ்வரர்
அம்மன் கிருபாம்பிகை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் காரைமரைக்காடு
ஊர் காரை
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம முனிவர் சபித்து விட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. மன அமைதிக்காக இலிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காக கங்கையை இவ்விடத்தில் பொங்கச்செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்நதி, “கவுதமிஎனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், பாலாற்றில் இந்த நதி ஐக்கியமாகி விட்டது. கவுதமர் பூஜித்த சிவன் இங்கு கவுதமேஸ்வரர்என்ற பெயரில் அருளுகிறார்.

அம்பாள்கிருபாம்பிகை சிவன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் காட்சி தருகிறாள். ஒரே சமயத்தில் சிவன், அம்பிகை இருவரையும் தரிசிக்கும் வகையில் கோயிலின் அமைப்பு இருக்கிறது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம்

+91-4633-222 373

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்

அம்மன் உலகம்மன்

தல விருட்சம் செண்பகமரம்

தீர்த்தம் காசி தீர்த்தம்

பழமை 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் தென்காசி

மாவட்டம் திருநெல்வேலி

மாநிலம் தமிழ்நாடு

சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட, காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பகவனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு, அங்கு கோயில் கட்டி வழிபட்டான்.

1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.