Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம்

அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 254247

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜராஜசதுர்வேதி மங்கலம்
ஊர் பிரம்மதேசம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தைமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்தார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருந்ததைக் கண்டார். பின், அவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி, சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து மனமுருகி வணங்கிய அவர், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், இத்தலத்தில் கைலாசநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நவகைலாயங்களில் ஆதிகைலாயம்எனப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி), மதுரை மாவட்டம்.

+91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் நடராஜர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் நெய்கொட்டா மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
ஆகமம் 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திடியன் மலை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, அவரது பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்‌கெல்லாம் ஒய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை ‌செய்யப்பட்டு வணங்கப்பட்டது. அவ்வாறு ஒர் நாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது ‌கோயில் அமைந்திருக்கும் பகுதி்க்கு அருகே உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஒர் பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ‌ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்ட‌ை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதி்ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தினியே கோயிலைக்கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.