Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை
அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் , கொல்லிமலை – சேலம் மாவட்டம்.
+91- 94422 76002, 97866 45101
காலை 7 மணி முதல் 1 மணி வரை, பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
மூலவர் | – | அறப்பளீஸ்வரர் | |
அம்மன் | – | தாயம்மை, அறம்வளர்த்தநாயகி | |
தீர்த்தம் | – | பஞ்சநதி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கொல்லிமலை | |
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்யத் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, “அறப்பளீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்துவிட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது இலிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.
அரங்குளநாதர் கோயில், திருவரங்குளம்
அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.
+91-98651 56430, 90478 19574, 99652 11768
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) | |
அம்மன் | – | பிரகதாம்பாள் | |
தல விருட்சம் | – | பொற்பனை | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவரங்குளம் | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை உணவு தேடச் சென்ற அந்த வேடுவச்சியைக் காணவில்லை. நீண்டதூரம் சென்றும் உணவு கிடைக்காத அவள், திரும்பி வரும் வழியை அறிய முடியாமல் தவித்தாள். அவளை ஒரு முனிவர் கண்டார். பத்திரமாக அவளை வேடனிடம் ஒப்படைத்தார். அவர்களது வறுமை நிலையைக் கண்ட அவர் ஒரு பனைமரத்தை அவர்கள் அறியாமலே படைத்து விட்டு சென்று விட்டார். அந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கீழே விழுந்தது. இதை எடுத்த வேடன், ஊருக்குள் வந்து ஒரு வணிகரிடம் கொடுப்பான். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், வணிகர் ஏதோ சிறிதளவு பொருளை மட்டும் கொடுப்பார். அதைக் கொண்டு உணவு சமைத்து அவன் காலத்தை ஓட்டி வந்தான்.