Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர்
அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர், கடலூர் மாவட்டம்.
+91 505 33249, 96002 05958
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மார்க்கசகாயேஸ்வரர், வழித்துணைநாதர் | |
அம்மன் | – | மரகதவல்லி | |
தீர்த்தம் | – | வெள்ளாறு | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஒரத்தூர் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர், விருத்தாச்சலம் சென்றார். அவர் இத்தலத்தைக் கடந்தபோது வழி தெரியவில்லை. எனவே, ஓரிடத்தில் அப்படியே நின்று விட்டார். தனக்கு வழி காட்டும்படி சிவனை வேண்டினார். அப்போது, அவர் முன் வந்த முதியவர் ஒருவர், “அடியவரே, காட்டுப்பாதையில் பாதியிலேயே நின்று விட்டீரே. எங்கு போகவேண்டும்?” என விசாரித்தார். அவர் தனக்கு பாதை தெரியாததைச் சொன்னார். முதியவர் அவரிடம் தான் வழி காட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் தலம் வரையில் அவருடன் சென்று, அங்கிருந்து வழியைக் காட்டினார். சுந்தரர் அவருக்கு நன்றி சொல்ல முயன்றபோது
குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு
அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில், கோயம்பேடு, சென்னை.
+91-44 – 2479 6237
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் | |
அம்மன் | – | தர்மசம்வர்த்தினி | |
தீர்த்தம் | – | குசலவ தீர்த்தம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோயம்பேடு | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அயோத்தியில் இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க இராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள், இலவன், குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். இராமர் தனது தந்தை என தெரியாமலேயே, இலவகுசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் இராமபிரான், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் சென்ற இலவகுசர், மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும், சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் இராமபிரான் மீது கோபமடைந்து தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர்.