Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-96778 18114

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் குபேரபுரீஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தஞ்சவூர்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

குபேரன் தஞ்சாவூருக்கு வந்து சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர்எனப்பட்டார்.

இராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற, பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு தஞ்சவூர்என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் தஞ்சாவூர்ஆனதாகத் தல புராணம் குறிப்பிடுகிறது. “குபேரபுரீஸ்வரர்என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம்

அருள்மிகு குபேரலிங்கேசுவரர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆன்மிகச் சிறப்புகளைத் கொண்டு, தெய்வீகப் பொலிவால் தனித்து விளங்கும் திருக்கழுக்குன்றம் ஊர் நுழைவு வாயிலிலேயே மலையைப் பார்த்தவண்ணம் ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சித்தபுருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம். ஆவுடையார் மேடை பலவகை மருந்துகளால் செய்விக்கப்பட்டது. அந்த மேடையின் மேலே குன்றாத வளம் அருளும் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ஒரு காலகட்டத்தில் இத்திருக்கோயில் பூஜைகள் நின்றன. ஆலயமும் சிதிலமடைந்தது. இறைவனின் திருவிளையாடல். ஒரு பிரதோஷ தினத்தன்று, “உனக்கு மட்டும் வீடு கட்டிக்கொண்டு, எனக்கு வீடு கட்டாமல் இருக்கிறாயேஎன்று பக்தர் ஒருவரின் கனவில் அசரீரி ஒன்று தோன்றியது.