Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம்
****************************************************************************************************
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அம்மன் : – முத்துமாரியம்மன்
பிறபெயர் : – பூவாடைக்காரி
தல விருட்சம் : – வேம்பு
விசேசம் : – முருக எந்திரம்
தீர்த்தம் : – ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், பொழுதுபடாசுணை
பிறதீர்த்தம் : – தளும்புசுணை
ஊர் : – நார்த்தாமலை
புராணபெயர் : – நாரதகிரிமலை
பிறபெயர் : – நகரத்தார்மலை
மாவட்டம் : – புதுக்கோட்டை
இத்திருக்கோயிலின் அம்மன் சிலை நார்த்தாமலையிலிருந்து சுமார் 4 கல் தொலைவிலுள்ள கீழக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும், இச்சிலையை இந்த ஊரில் உள்ள குருக்கள் பிரதிட்டை செய்து, சிறிய கோயில் ஒன்று எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் திருவண்ணாமலை சமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் இங்கு வந்து அம்பாளின் அருளினால் தன் சொந்த முயற்சியால் இத்திருக்கோயிலை விரிவுபடுத்தியும், மண்டபங்கள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும் புகழ் பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அம்மன் சன்னதியின் வடபுற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லிலாலான முருகன் எந்திரம் மிகவும் விசேடம் என்று கருதப்படுகிறது.
தேவ ரிசி நாரதர் இங்கு தங்கி தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது. நாரதர் பெருமான் இம்மலையில் வந்து தங்கியதால் நாரதர் மலை என்று வழங்கப்பட்டதாகவும் காலப்போக்கில் நார்த்தாமலை என்று வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர்-614 202, தஞ்சாவூர் மாவட்டம்
*************************************************************************************************
+91 93448 14071(மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – மணலூர்
மாநிலம்: – தமிழ்நாடு
காவிரி, கொள்ளிடம் நதிகள் ஓடும் மணலூரில், மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். மழையால் மக்களுக்கு தொல்லை உண்டாகக்கூடாது என்றெண்ணிய இப்பகுதியை ஆண்ட சிற்றரசர், மழை தரும் கடவுளான மாரியம்மனை வேண்டினார். உடன் மழை நின்று வெள்ளம் வடிந்தது. இதனால், மகிழ்ந்த சிற்றரசர் இங்கு மாரியம்மனுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல்கள் அதிகம் இருந்ததால் இவ்வூர் “மணலூர்” எனப்பட்டது.