Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர், சென்னை– 600 004.
****************************************************************************************
+91- 44 – 2498 1893, 2498 6583 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – ஆலமரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – மயிலாபுரி
ஊர்: – மயிலாப்பூர்
மாநிலம்: – தமிழ்நாடு
முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு உருவாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.
பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் கருவறை மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.
அம்பாள், எளிமையை உணர்த்துவதற்காக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், “முண்டக கண்ணியம்மன்” என்று அழைக்கப்படுகிறாள்.
முண்டகம் என்றால் “தாமரை‘ என்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பு.
அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை
அருள்மிகு மும்பாதேவி கோயில், மும்பை -400 002, மகாராட்டிர மாநிலம்
*********************************************************************************
+91 22 2242 4974 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – முங்கா
ஊர்: – மும்பை
மாநிலம்: – மகாராட்டிரம்
ஒரு காலத்தில் மும்பையைச் சுற்றியிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது இயற்கையின் சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இறைவனை வேண்டினர்.
பராசக்தியான அம்பிகை அவர்களுக்கு அருள்புரிந்தார். இயற்கைச் சீற்றம் தணிந்தது. “முங்கா” என்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையின்படி முங்கா என்பவர்கள் மீனவ பெண்கள் என்றும், தங்கள் கணவன்மார் கடலுக்குசென்றுவிட்டு நல்லபடியாகத் திரும்ப அம்பிகையை வேண்டியதாகவும், முங்கா என்ற பெயர் நாளடைவில் திரிந்து மும்பா என மாறிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த தேவியின் உண்மையான பெயர் “முங்கா தேவி” என இருந்தது. காலப்போக்கில் “மும்பா தேவி” என மாறிவிட்டது.