Category Archives: ஆலயங்கள்

குரு தோஷம் நீங்க

குரு தோஷம் நீங்க

சோதிடத்தை நம்புபவர்கள் மட்டும் படிக்கவும்.

பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி. அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று போற்றப்படும் வியாழபகவான். இவர் தேவ குருவாக விளங்குபவர். குரு அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.

குரு பகவான் – மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவர். நாட்டை ஆளவைப்பார்; நல்லோருடன் சேர வைப்பார்; தெய்வீக அறிவுக்கும் – வேதாந்த ஞானத்திற்கும் – முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப் பொருளாக உள்ளவர். குருவை வியாழன் என்று அழைப்பார்கள். புத்திர காரகன் என்றும் அவருக்கும் ஒரு பதவி உண்டு. குருவின் நிலையைக் கொண்டுதான் ஒருவருக்குப் பிள்ளைகள் உண்டா, அவர்கள் ஜாதகருக்கு உதவுவார்களா? அடங்கி நடப்பார்களா என்பதை அறியலாம்.

குரு பார்க்க கோடி நன்மை. தலைவணங்காத தமைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனித குலத் திலகமாக வாழ வைப்பார். மென்மைக்கும் தன்மைக்கும் வித்தாவார் இவர். விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர் ஆக்குவார். அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரி வழங்குவார். சிம்மக்குரலைத் தந்து பலரையும் பணிய வைக்கும் ஆற்றலைத் தருவார். மஞ்சள் நிறத்தவர். மந்தகாச முகத்தவர். இனிப்புப் பிரியர். சாத்வீகக் குணத்தவர். உடலில் சதை இவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபத்திற்கு உரியவர் இவர். “பொன்னன்” எனும் பெயர் படைத்த இவரது உலோகமே பொன்தான். புஷ்பராகக் கல்லுக்குரியவர். பணப்பெட்டியை செழிக்க வைப்பவர். ஆண் கிரகம் இவர். பஞ்சபூதங்களில் ஆகாயம். வடகிழக்கு இவரது திசை. மிக மிக மேலான சுபக்கிரகம். இவர், தனுசு, மீனம் ஆகிய ராசிக்களுக்குரியவர். கடகம் உச்சவீடு, மகரம் நீச வீடு. பகலில் பலமிகுந்த இவர் தனது பார்வையால் இதர கிரகங்களுக்கும் பலத்தை தருபவர். சந்திரன், அங்காரகன், சூரியன் மூவரும் நண்பர்கள். புதனும் – சுக்கிரனும் பகைவர்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் இவர். நாம் உயர்வதற்கு, ஜாதகத்தில் ஏனைய கிரகங்களில் நிலை சற்று தாழ்ந்து இருந்தாலும் கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதுமானது. பிரகஸ்பதி என்ற சொல்லின் பொருள் ஞானத் தலைவன் என்பது ஆகும். தேவகுருவான இவர் சாந்தமான உருவுடையார். சதுரப்பீடம் இவருடையது, பீதாம்பரம், வாசீகர் என்றல்லாம் திருநாமங்களுடைய இவர், லோகபூஜ்யர் என்றும் சிறப்பு பெயர்களும் கொண்டவர்.

ஒளிபடைத்த மேதைகளையும், பிரும்மத்தை உணர்ந்த ஞானிகளையும் பக்தர்களையும், சேமித்தல் இவையனைத்தும் மூலகர்த்தா இவரே ஆவார். பலம் படைத்த இவரது தசை இளமையில் வந்தால் கல்வியில் முதல்நிலை உண்டாகும்; நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும்; வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள்.

குருவின் பார்வை

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அதன்படி 5 – 7 – 9ம் பார்வைகள் குருவின் விசேச பார்வைகள். இப் பார்வையில் ‘சுப’ பலன்கள் அதிகரிக்கும்.

குருவுக்கு உரிய நிவேதனப் பொருட்கள்

மஞ்சள் வஸ்திரம்

முல்லை மலர்கள்

கொண்டக்கடலை

சர்க்கரைப் பொங்கல்

குருவினால் உண்டாகும் பலன்கள்

செல்வம்
புகழ்
குழந்தைபாக்கியம்
திருமணம் இந்த நான்கும் கிடைக்கும்.

குரு தோஷங்கள் நீங்க

சகஸ்ரநாம அர்ச்சனைகள்
குரு ஹோமம் (பணச்செலவு அதிகம்)
பாலாபிஷேகம்
ஜாதக தோஷங்கள் நீங்க இந்த பரிகாரங்களை செய்யவும்.

வழக்கறிஞர், மதபோதகர். ஆசிரியர், லேவாதேவித் தொழில் முதலியவற்றையும், ஜாதகரின் சிறந்த குணங்களைத் தீர்மானிக்கவும், குருவின் நிலைதான் முக்கியமானது.

குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான்.

சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.
விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
வியாழ நோக்கம்
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.

குருதோசம் இருக்கிறதென சோதிடர் சொன்னால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

தெட்சிணாமூர்த்தி கோவிந்தவாடி காஞ்சிபுரம்
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலம் சிவகங்கை
வசிஷ்டேஸ்வரர் தென்குடித்திட்டை தஞ்சாவூர்
சுப்ரமணியசுவாமி எண்கண் திருவாரூர்
ஆதிநாதன் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
வாலீஸ்வரர் கோலியனூர் விழுப்புரம்
ஞீலிவனேஸ்வரர் திருப்பைஞ்ஞீலி திருச்சி

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், இலட்சுமணம்பட்டி

அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோயில், லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் அஞ்சல், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம், தமிழ்நாடு.

9629218546 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

அம்மன் பாம்பலம்மன்
விருட்சம் வேம்பு
தீர்த்தம் காவிரி
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் லட்சுமணம்பட்டி
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு

அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் வேலாயுதம் பாளையதிலிருந்து பிரிந்து வந்ததாக வரலாறு. கொடிய விஷமுடைய மனிதர்களைத் தீண்டிவிட்டால் கோவிலில் வந்து பத்தினி(வேப்பம் இலை அரைத்தது) சாப்பிட்டால் விஷம் முறிந்து குணமடைகின்றனர். குணமாகாத நோய்களுக்காக கோவிலிலே இருந்து பத்தியம் கடைபிடித்தால் நோய் நீங்கி குணமடைகின்றனர். குழந்தை இல்லாதோர் பிரார்த்தனையாக வேண்டிகொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அருள்மிகு ஸ்ரீ பாம்பலம்மன் திருக்கோயில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கிருஷ்ணராயபுரத்தில்(சித்தலவாய்) இருந்து 9 கி.மீ தொலைவில் லட்சுமணம்பட்டியில் அமைந்துள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு போன்ற நாட்கள் விசேடமாக இருக்கும்.