Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம்.

+91 -4366-278 531, 278 014, 94884 15137

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மபுரீஸ்வரர்இது ஒரு சிவத்தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்

உற்சவர்

சுப்ரமணியசுவாமி

அம்மன்

பெரியநாயகி

தலவிருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

குமாரதீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

சமீவனம்

ஊர்

எண்கண்

மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலையும்தானே ஏற்றார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி, தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலைத் தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முகக் கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம்என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது. எட்டுக் கண்கள் – “எண்கண்.”

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, (ஆண்டிபட்டி), தேனி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேலப்பர்

தலவிருட்சம்

மாமரம்

தீர்த்தம்

மாவூற்று

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

தெப்பம்பட்டி

மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்து வந்த பழியர் இனத்தவர்கள், வள்ளிக்கிழங்கினைப் பயிரிட்டு அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோண்டிய அவர்கள் வேரின் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக் கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.