Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-244 8138, 94436 50826 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருப்பந்துறையில் முருகனைத் தியானக் கோலத்தில் குடுமி வைத்த நிலையில் காணலாம்.
தந்தைக்கே தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தும் வகையிலான தலம் திருப்பந்துறை. இங்கு முருகன் தியானக் கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துவிட்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன். இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன். சுவாமிமலை திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.
அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி
அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். +91- 4366-245 426 (மாற்றங்களுக்குட்பட்டது) காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
முருகன் |
|
தல விருட்சம் | – |
வன்னி மரம் |
|
தீர்த்தம் | – |
சரவணப்பொய்கை |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
எட்டுக்குடி |
|
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். “சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன், அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான். இது போல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. “எட்டிப்பிடி” என்ற வார்த்தை காலப்போக்கில் “எட்டிக்குடி” என மாறி தற்போது “எட்டுக்குடி” ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது.