Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம்
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கிழக்கு தாம்பரம், கந்தாஸ்ரமம், சென்னை மாவட்டம்.
+91- 44-2229 0134, +91- 2229 3388,
+91- 94446 29570 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுவாமிநாதர் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
கந்தாஸ்ரமம் |
மாவட்டம் |
– |
|
சென்னை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் சுயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது இயற்பெயர் சுப்ரமண்யம். இந்த பெயர் காரணமாகத்தான், இவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் “கந்தாஸ்ரமம்” எனப் பெயர் பெற்றன. சேலம் கந்தாஸ்ரமத்தை அமைத்தவரும் இவரே. 2002 மே 27ல் இவர் சமாதி அடைந்தார்.
கணபதியின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி, சென்னை கந்தாஸ்ரமத்தில் அருளுகிறார். 12 அடி உயரம், ஐந்து முகம், பத்து கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் இருக்கிறார். அபயம், வரம், பாசம், தந்தம், உருத்ராட்ச மாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை தாங்கியுள்ளார். சங்கடகரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனை உண்டு. இவரது சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பால கணபதி, பஞ்சமுக ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி உள்ளனர்.
இங்குள்ள முருகன் “சுவாமிநாத சுவாமி” என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார். பழநியைப்போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்துள்ளார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார். மேற்கு பார்த்த முருகனை வணங்கினால் ஞானம், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம்
அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம், திருவள்ளூர் மாவட்டம்.
+91- 94444 04201 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுவாமிநாத பாலமுருகன் | |
உற்சவர் | – | பாலமுருகன் | |
தல விருட்சம் | – | வன்னி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மேட்டுக்குப்பம், வானகரம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இறைவனுக்கு கிடையாது. ஏற்கனவே உயர் இனத்து தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த வள்ளியையும் ஆட்கொள்ள முடிவு செய்தார்.
மனிதனாகப் பிறந்தவர்கள் இந்த உலக இன்பங்கள் நிரந்தரமானதென்றும், நிஜமானதென்றும் கருதி, மரணத்தைப் பற்றியே அக்கறையே இல்லாமல், இங்கேயே மூழ்கிக் கிடக்க எண்ணுகிறார்கள். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கும். அதில் மூழ்கிக் கிடந்தாள் வள்ளி. இவ்வாறு அறியாமல் மூழ்கிக் கிடக்கும் உயிர்களையும் தானே வலியத் தேடிச்சென்று ஆட்கொள்ள வருகிறான் இறைவன். முருகனும் வள்ளியை ஆட்கொள்ள வலிய வந்தார். இறை சிந்தனையே இல்லாத உயிர்கள் அவனைச் சிந்திப்பதே இல்லை. இது முருகனைக் கண்டு வள்ளி ஒதுங்கி ஓடியதைக் குறிக்கிறது. பின்னர் விநாயகர் உதவியுடன் அவளை மணந்தார். இது கந்தபுராணக்கதை,
ஆனால், கர்ண பரம்பரையாக மற்றொரு செய்தி கூறப்படுகிறது.