Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-94434 77295, 98432 84842 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுப்ரமணியர் |
தலவிருட்சம் |
– |
|
மாமரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
அனுவாவி |
மாவட்டம் |
– |
|
கோயம்புத்தூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில் உள்ள முருகப்பெருமானை வேண்டினார். அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். கந்தப் பெருமான் வழிபாடு இராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.
“ஹனு” என்றால் ஆஞ்சநேயர். “வாவி” என்றால் ஊற்று, நீர்நிலை என்று பொருள். அனுமனுக்காக தோன்றிய ஊற்றாதலால் இத்தலம் “ஹனுவாவி” என்று பெயர் பெற்று தற்போது “அனுவாவி” ஆகிவிட்டது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் “அனுமக்குமரன் மலை” என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. அதனால், மைசூர் மன்னன் ஒருவன் இங்குள்ள ஊற்றை “காணாச்சுனை” என பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளான். எந்த காலத்திலும் வற்றாத இந்த புனித நீர் பக்தர்களின் தாகம் தீர்க்கிறது. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சுவாமியின் சிரசில் பூ வைத்து, ஒரு செயலைத் துவங்கலாமா என பார்க்கும் பழக்கம் உள்ளது.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை, வேலூர் மாவட்டம்.
+91- 4172 – 252 295 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுப்ரமணியர் |
அம்மன் |
– |
|
வள்ளி |
தலவிருட்சம் |
– |
|
வேங்கை |
தீர்த்தம் |
– |
|
சரவணப்பொய்கை |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப்பெயர் |
– |
|
சின்னவள்ளிமலை |
ஊர் |
– |
|
வள்ளிமலை |
மாவட்டம் |
– |
|
வேலூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக்கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவத் தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து, “வள்ளி” என பெயரிட்டு வளர்த்தான்.
கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் “குமரி வள்ளிக்கு” சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறித் தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.