Category Archives: சிவ ஆலயங்கள்
மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர்
அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்.
+91- 4364 – 256 044, 94436 – 78793
காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மதங்கீஸ்வரர் | |
அம்மன் | – | மாதங்கீஸ்வரி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | மதங்க தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மதங்காஸ்ரமம் | |
ஊர் | – | திருநாங்கூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம் செய்வதற்காக தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார். எங்கும் தண்ணீர்க்காடாக இருந்ததால், அவரால் பூமியில் இறங்க முடியவில்லை. அப்போது வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதரிடம், பூமியில் தவம் செய்ய தண்ணீர் வற்றிய தகுந்த இடத்தை காட்டும்படி ஆலோசனை கேட்டார். அவர் சுவேத வனம் என்ற இடத்தில் தவம் புரியலாம் என ஆலோசனை சொன்னார். அதன்படி அங்கு சென்ற மதங்கமுனிவர் சிவனை வேண்டித் தவம் செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்தார்.
சிவனிடம் மதங்கர், “ஜீவன்களுக்கு தந்தையாக இருக்கும் நீங்கள் எனக்கும் உறவினனாக வேண்டும்” என கேட்டார். சிவன் முனிவரிடம் தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக கூறிவிட்டு மறைந்தார். மதங்கர் மீண்டும் தன் தவத்தைத் தொடர்ந்தார். ஒரு சித்ராபவுர்ணமி தினத்தன்று அவர் மணிக்கருணை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது, நீரில் மிதந்து வந்த தாமரை மலரின் மீது ஒரு அழகிய குழந்தை இருந்ததைக் கண்டார். “மாதங்கி” எனப் பெயர் சூட்டி அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்த்தார். மாதங்கி பருவ வயதை அடைந்தபோது, அவளை மணம் முடிக்கும் தகுதி சிவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்திருந்த முனிவர் சிவனை வேண்டினார். சிவன் அங்கு வந்து மாதங்கியை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்களிருவரும் மதங்கருக்கு சிவ, பார்வதியாக தரிசனம் தந்தனர். அவரது வேண்டுதலுக்காக சிவன், இலிங்கமாக எழுந்தருளி “மதங்கீஸ்வரர்” என்ற பெயர் பெற்றார்.
மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை
அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை, லால்குடி, திருச்சி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மருதாந்தநாதேஸ்வரர் | |
அம்மன் | – | சுந்தர காஞ்சனி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆங்கரை | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மருதாந்தன் என்பவன் சுகோலர் என்ற முனிவரின் மகன். முனிவரின் மனைவி முறைகெட்டு நடந்தாள். எனவே முனிவர் அவளை ஒதுக்கிவிட்டார். விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்துவந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. இளவரசன் பெண்பித்தனாக இருந்தான். அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப்போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தங்களைவிட வயதில் முதிர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சென்றனர். அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகே அந்தப் பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித்தீர்த்தான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும்பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார். “எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருதவேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழலாம். அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்” என்றார். இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடு பட்டது. இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான். அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன்பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள்.