Category Archives: சிவ ஆலயங்கள்

தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98407 97878

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெட்சிணாமூர்த்தி
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருவொற்றியூர்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. முன்மண்டபத்தில் ஒரு பாண லிங்கம் இருக்கிறது. தெட்சிணாமூர்த்திக்கு பூஜை நடக்கும்போது, இந்த இலிங்கத்திற்கும் பூஜை செய்யப்படும்.

தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி

அருள்மிகு தேசிகநாதசுவாமி திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91- 4565 -281 575

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தேசிகநாதர்
அம்மன் ஆவுடைநாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் பைரவர் தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேசிகநாதபுரம்
ஊர் நகரசூரக்குடி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

பார்வதிதேவியின் தந்தை தட்சன், ஒரு யாகம் நடத்தினான். ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம்(பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார். அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார். சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோசனம் தந்தார். இதன் அடிப்படையில், இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.