நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம்
அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம்.
+91 98435 46648
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | |
உற்சவர் | – | நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி | |
அம்மன் | – | தவமிருந்த நாயகி | |
தல விருட்சம் | – | நாகலிங்க மரம் | |
தீர்த்தம் | – | சிவகங்கை தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவஆகமம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தேவதானம் | |
மாவட்டம் | – | விருதுநகர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறைபோர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையைப் பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தைப் பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு, பாண்டியன் கோயில் எழுப்பினான். நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான்.
நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர்
அருள்மிகு நாறும்பூநாத சுவாமி திருக்கோயில், திருப்புடைமருதூர், திருநெல்வேலி மாவட்டம்.
+91 – 4634 – 287244
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாறும்பூநாதர் | |
உற்சவர் | – | பூநாதர் | |
அம்மன் | – | கோமதியம்பாள் | |
தல விருட்சம் | – | மருதம் | |
தீர்த்தம் | – | தாமிரபரணி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருப்புடைமருதூர் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு சமயம் சிவனிடம் தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டத்தை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப்பெற்றனர்.
பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார்.