நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம்
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம் .
+91 -94420 – 10834, 94867 – 48013
காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகேஸ்வரர் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பூவரசன் குப்பம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் பல இடங்களில் சைவ, வைணவக் கோயில்களை கட்டி வந்த போது காடுகளையும், மலைகளையும் சீர் செய்ய வேண்டி வந்தது. அப்படி செய்து கோயில்கள் கட்டும் போது அங்கிருந்த புற்றுக்களையும், நாகங்களையும் அழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால் அவனுக்கும் அவனது வம்சத்தினருக்கும் நாகதோஷம் ஏற்பட்டு அவதியுற்றான். அப்போது தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரை சந்தித்து தனது நிலையைக் கூறினான். இதற்கு பரிகாரம் கேட்க,”இந்த ஆற்றங்கரையின் ஓரத்திலுள்ள ஒரு புற்றினுள், சுயம்புவாக ஒரு சிவலிங்கம் உள்ளது. அதனை ஒரு நாகம் பூஜித்து வருகிறது.
நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.
+91- 4652- 232 420, 94439 92216
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகராஜர் | |
தல விருட்சம் | – | ஓடவள்ளி | |
தீர்த்தம் | – | நாகதீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நாகர்கோவில் | |
மாவட்டம் | – | கன்னியாகுமரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.
தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்” எனப் பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரியகோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.
சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது. புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதைத் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.