நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், இருகூர்(ஒண்டிப்புதூர்)

அருள்மிகு நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், இருகூர்(ஒண்டிப்புதூர்), கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-422-2632452,94881 55164

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் சுயம்வர பார்வதி தேவி, மீனாட்சியம்மன்
பழமை 3000 வருடங்களுக்கு முன்
ஊர் இருகூர் ஒண்டிப்புதூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகாற்சோழன் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. 28வது கோவிலாக சவுந்தரேஸ்வரர் கோயிலில் திருப் பணி செய்துள்ளார்.

இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சவுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக் கின்றனர்.

நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், காங்கயம்பாளையம்

அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில், காங்கயம்பாளையம், ஈரோடு மாவட்டம்.

+91- 424- 3201 675, 2920 039, 98420 22017

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நட்டாற்றீஸ்வரர்
அம்மன் நல்லநாயகி (அன்னபூரணி)
தல விருட்சம் அத்தி மரம்
தீர்த்தம் காவிரி தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காங்கயம்பாளையம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

வாதாபி, வில்வலன் என்னும் இரு அசுரர்கள், மகரிஷிகளின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு உணவின் வடிவில் சென்று, பின்பு வயிறைக்கிழித்து வெளியேறி, அவர்களை உணவாக சாப்பிடும் வழக்கமுடையவர்கள். அவர்கள், உலகைச் சமப்படுத்த பொதிகை சென்ற அகத்தியரைக் கண்டனர். அவரையும் உண்ண திட்டமிட்டனர். வாதாபி மாங்கனி உருவெடுத்தான். அதை எடுத்துக்கொண்ட வில்வலன், சிவனடியார் வேடத்தில் அகத்தியர் முன் சென்றான். அவரிடம், “சிவனின் கட்டளைக்காக தென்திசை செல்லும் தாங்கள், என் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்என வேண்டி மாங்கனியைக் கொடுத்தான். அவரும் அதை சாப்பிட்டுவிட்டார். அப்போது, வில்வலன் அகத்தியரின் வயிற்றுக்குள் இருந்த வாதாபியை வெளியே அழைத்தான். தன் ஞானதிருஷ்டியால் இதையறிந்த அகத்தியர், “வாதாபி ஜீரணோத்பவஎனச் சொல்லி வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகிவிட்டான். கோபம் கொண்ட வில்வலன், சுயவடிவமெடுத்து அகத்தியரை அழிக்க முயன்றான். அகத்தியர் அவனையும் சம்காரம் செய்தார். இருவரைக் கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மகத்திதோஷம் (கொலை பாவம்) உண்டானது. இந்த தோஷம் நீங்க, காவிரி ஆற்றின் நடுவில் இருந்த குன்றில், மணலில் இலிங்கம் வடித்து பூஜை செய்து விட்டு கிளம்பினார். அந்த இலிங்கம் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் இருந்ததால் பிற்காலத்தில் இவருக்கு, “நட்டாற்றீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது.