அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை

அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை (திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான், நாகை மாவட்டம்.

+91- 4364 – 283 188 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நற்றுணையப்பர்
அம்மன் பர்வத ராஜபுத்திரி, மலையான் மடந்தை
தல விருட்சம் செண்பக, பின்ன மரம்
தீர்த்தம் சொர்ண தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநனிபள்ளி
ஊர் புஞ்சை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம். சம்பந்தர், தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து இத்தலத்தை பாடியுள்ளார். அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க பாலையாயிருந்த இத்தலத்தை நெய்தலாகப் பாடினார். கருவறைக்கே, யானை வந்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. கோபுர வாயிலில் பஞ்ச மூர்த்திகள் சுதைச் சிற்பங்கள் உள்ளன. இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம். எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். காவிரிநதி இங்கு வந்து கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர். அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க, விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் பொன்செய்ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி புஞ்சைஆனது. பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்காரம் செய்த கோலத்திலும் அருளுகிறார். கோயில் மூலஸ்தானமும், கோயில் மண்டபங்களும் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.

அத்துடன் நனிபள்ளி கோடி வட்டம்என்ற மண்டபம் மிகவும் அருமை. கோயில் சுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா, இலிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர். அமைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில்

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்

+91-99437 97974 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவர்ணபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் வன்னி, வில்வம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்செம்பொன்பள்ளி, இலக்குமிபுரி, கந்தபுரி, இந்திரபுரி
ஊர் செம்பொனார்கோவில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன், தன் மகள் தாட்சாயிணியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயிணி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது, ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும், தட்சன் நிந்தித்து விடுகிறார்.

தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார்.