அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்

அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்), திருவாரூர் மாவட்டம்.

+91- 4366-247 824, +91- 94424 03391 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கண்ணாயிரநாதர்
அம்மன் கைலாச நாயகி
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்காறாயில், திருக்காறைவாசல்
ஊர் திருக்காரவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

டங்கம்என்றால் கல் சிற்பியின் சிற்றுளிஎன்று அர்த்தம். “விடங்கம்என்றால் சிற்பியின் உளி இல்லாமல்என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்தானே உருவான இயற்கை வடிவங்களை சுயம்புஅல்லது விடங்கம்என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 இலிங்கங்கள் சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன.

ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். “வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?” என இந்திரன் கேட்க,”தாங்கள் பூஜை செய்து வரும் விடங்க இலிங்கத்தைப் பரிசாகத் தாருங்கள்என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த இலிங்கத்தை தர மனமில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைத் தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் செங்கழுநீர் பூவின் வாசம் உடையஉண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற இலிங்கங்களையும் முசுகுந்தனுக்குப் பரிசாக தந்து விடுகிறார். ஏழு இலிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் வீதி விடங்கர், திருநள்ளாறில் நகர விடங்கர், நாகப்பட்டினத்தில் சுந்தர விடங்கர், திருக்குவளையில் அவனி விடங்கர், திருவாய்மூரில் நீலவிடங்கர், வேதாரண்யத்தில் புவனி விடங்கர், திருக்காரவாசலில் ஆதி விடங்கர் என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் குக்குட நடனம்ஆடித் தரிசனம் தருகிறார். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஞான தெட்சிணாமூர்த்தியாகஅருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். புராண காலத்தில் இத்தலம் முழுவதும் காரகில்எனும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. எனவே திருக்காரகில்என வழங்கப்பட்டு அதுவே திருக்காரவாசல்என பெயர் மருவியது.

அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி

அருள்மிகு இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, மாவூர் வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 237 707, 94438 06496 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரத்தினபுரீஸ்வரர் (மாணிக்கவண்ணர், கரீநாலேசுரர்)
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் மாவிலங்கை
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாட்டியத்தான்குடி
ஊர் திருநாட்டியத்தான்குடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

இரத்னேந்திர சோழ மன்னனும், அவனது தம்பியும் அவர்களது தந்தையார் விட்டுச்சென்ற இரத்தினங்களை மதிப்பிட்டுப் பிரித்து கொள்ள முயற்சித்தனர். இரத்தினத்தை மதிப்பிடுபவர்கள் பலர் வந்து இரத்தினங்களை மதிப்பிட்டும் இவர்கள் இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை. குழப்பம் நீடித்தது. கடைசியில் இருவரும் இத்தலத்து இறைவனிடம் வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன் தானே இரத்தின வியாபாரியாக வந்து இரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்து கொடுத்ததுடன் நாட்டையும் பிரித்து கொடுத்துவிட்டு மறைந்தருளினார் என்பது வரலாறு. இதன் காரணமாகவே இத்தல இறைவன் இரத்னபுரீஸ்வரர்என அழைக்கப்படுகிறார்.