அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452-234 9868, 234 4360 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் கடம்ப மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம் காரண ஆகமம்
பழமை 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர்

மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் தடாதகைஎனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.

மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் கன்னிநாடுஎனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.

நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்குப் பக்கத்தில் தடாதகை இருந்ததை காணக் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல்

அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366-232 853,94433 32853, 99431 52999 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புண்ணியகோடியப்பர்
உற்சவர் திருவிடைவாயப்பர்
அம்மன் அபிராமி
தல விருட்சம் கஸ்தூரி அரளி
தீர்த்தம் ஸ்ரீ தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவிடைவாய்
ஊர் திருவிடைவாசல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு திருவிடைவாசல்என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் விடைஉள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் விடைவாயேஎன குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.