அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்.
+91-4566-282 644 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர் | |
அம்மன் | – | துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை | |
தல விருட்சம் | – | அரசு, புன்னை | |
தீர்த்தம் | – | பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) “ஒலிப்புணரி‘ என்றும் பெயர். | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருச்சுழியல் | |
ஊர் | – | திருச்சுழி | |
மாவட்டம் | – | விருதுநகர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சுந்தரர் |
சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் “சுழியல்” என வழங்கப்படுகிறது என்பது தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும்.
சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்துபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது வரலாறு. திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும். திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும். இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும். இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி.
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.
+91- 4561 – 254 533 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிரத்தினேஸ்வரர் | |
அம்மன் | – | சினேகவல்லி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி, க்ஷீர குண்டம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஆடானை | |
ஊர் | – | திருவாடானை | |
மாவட்டம் | – | இராமநாதபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.