Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்.
+91- 4333 – 276 412, 276 467, 94427 62219
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரேஸ்வரர் | |
அம்மன் | – | பாகம்பிரியாள் | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பைரவர் தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | துர்வாசபுரம் | |
மாவட்டம் | – | புதுக்கோட்டை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம் வழியாக சென்றார். ஓரிடத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பூஜித்தார்.
பிற்காலத்தில் இந்த லிங்கம் புதைந்து போனது. இடையன் ஒருவன் இவ்வழியாக பால் கொண்டு சென்றபோது, தொடர்ந்து இவ்விடத்திலுள்ள மரத்தின் வேர் தட்டி, தடுக்கி விழுந்து பால் கொட்டியது. அதை வெட்டியபோது அவ்விடத்தில் ரத்தம் பீறிட்டது. பயந்து போன இடையன் அவ்விடத்தைத் தோண்டிய போது, லிங்கம் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
துர்வாசர் வழிபட்டதால் “துர்வாசபுரம்‘ என்று பெயர். இத்தலத்தில் சுவாமி “சுந்தரேஸ்வரர்‘ என்றும், அம்பாள் பாகம்பிரியாள் என்றும் அழைக்கப்பட்டனர்.
சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நெய்க்குப்பை, தஞ்சாவூர் மாவட்டம் .
காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரேஸ்வரர் | |
அம்மன் | – | சவுந்தரநாயகி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | நெய்க்கூபம் | |
ஊர் | – | நெய்க்குப்பை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பசுபதிநாதரான சிவபெருமான், உமையவளின் மூலமாக, பூமிக்கு வேத சக்திகளை அனுப்ப நினைத்தார். நான்கு வேதங்களின் கருத்துக்களையும் பந்து போன்ற கோள்களாக (கிரகங்கள்) மாற்றினார். அந்தக் கோள்களைப் பந்தாடி, மேலும் கீழுமாக அசைத்து வேத சக்திகளை பரவெளிக்கு அம்பிகை செலுத்தினாள். வேதக்கோள்கள் பெரும் ஒளிமிக்கவையாகத் திகழ்ந்தன. இதன் ஒளியைக் கண்டு, பேரொளி மிக்க சூரியனே அதிசயித்து விட்டான். ஏனெனில், அந்த ஒளியின் முன்பு சூரியனின் ஒளி கடுகைப் போல் சுருங்கிவிட்டது. இந்த மலைப்பிலும், அம்பிகையே அந்த கோள்களை பந்தாடி விளையாடுவதற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற நோக்கத்திலும், தான் மறையும் நேரத்தை, சூரியன் தள்ளி வைத்தான். இதனால், சகல லோகங்களிலும் சாயங்கால பூஜைகள் தம்பித்துவிட்டன. சூரிய அஸ்தமன நேரம் மாறியது கண்டு கோபமடைந்தது போல் நடித்த சிவபெருமான், அம்பிகையின் முன் நேரில் வந்தார். அம்பிகை அந்த கோபம் கண்டு ஒதுங்கி நின்றாள். அப்போது நான்கு வேதக்கோள்களும் அப்படியே வானில் அந்தரத்தில் நின்றுவிட்டன.