Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம்

அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயம், மடவிளாகம், ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பச்சோட்டு ஆவுடையார்
அம்மன் பச்சை நாயகி (பரியநாயகி)
தீர்த்தம் நிகபுஷ்கரணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பார்வதிபுரம்
ஊர் காங்கேயம் மடவிளாகம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அன்னை பார்வதி ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். சிவபெருமான், பச்சை மண்ணால் செய்யப்பட்ட திருவோட்டுடன், பிச்சையேற்பவராக (பிட்சாடனர்) அன்னைக்கு காட்சி கொடுத்தார். அடியவர்களுக்கு அன்னமிடுவதை தனது முதல் கடமையாக கொண்ட பார்வதி, சிவனுக்கு அன்னமிட்டார். இதனால் மகிழ்ந்த சிவன் பார்வதிக்கு காட்சி கொடுத்து, தன்னுடன் அழைத்து சென்றார் என்பது இத்தல புராண வரலாறாகும்.

பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் பச்சோட்டு ஆவுடையார்என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் பச்சோட்டு ஆளுடையார்எனக் காணப்படுகிறது. தலத்தின் நாயகி பச்சை நாயகி, பெரியநாயகி.”

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை

அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

+91-9841557775

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஒத்தாண்டேஸ்வரர்
அம்மன் குளிர்வித்த நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமழிசை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகால் பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சிவனை வழிபடுவதற்காக தனது யானையில் சென்றான். அப்போது யானையின் கால் ஒரு கொடியில் சிக்கிக்கொண்டது. கையால் அதனைக் களைய முயன்று முடியவில்லை. எனவே, தனது உடைவாளைக்கொண்டு அக்கொடிகளை வெட்டினான். அடியிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன், கொடிகளை விலக்கி பார்த்தபோது உள்ளே ஒரு இலிங்கம் இருந்தது. பதறிப் போன மன்னன், இலிங்கத்தை வெட்டிய அதே வாளைக்கொண்டு, சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான். அவனது பக்தியில் மெச்சிய சிவன், அம்பாளுடன் ரிஷபவாகனத்தில் காட்சி தந்து, இழந்த கையை மீண்டும் உடலுடன் பொருத்தினார். எனவே இவரை கைதந்தபிரான்என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரது அடியார்களின் கதையைச்சொல்லியும் அவர்களின் மனதை அம்பிகை குளிர்வித்தாள். எனவே இவள் குளிர்வித்த நாயகிஎன்றழைக்கப்படுகிறாள்.