Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர்
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
மூலவர் | – | வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, கஜாரி, கிருத்திவாசன், ஞானசபேசன் |
|
அம்மன் | – | பாலகுஜாம்பிகை, இளமுலை நாயகி, இளங்கிளை நாயகி | |
தல விருட்சம் | தேவதாரு | ||
தீர்த்தம் | – | பஞ்சமுக தீர்த்தம் | |
பழமை | – | 2000 ஆண்டுகளுக்கு முன் | |
ஊர் | – | வழுவூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இது சோழநாட்டுத் தலம். மயிலாடுதுறை – திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மங்கநல்லூருக்கு முன்னால் ‘வழுவூர் பெயர்ப் பலகை’ உள்ள
இடத்தில் திரும்பி, 2 கி.மீ. சென்றால் இவ்வூரை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம். அட்ட வீரட்டத் தலங்களுள் இதுவும் ஒன்று. “வழுவூர் வீரட்டம்” என்றழைக்கப்படும். இது பாடல் பெற்ற தலமன்று. இத்தலத்துக்குரிய மூர்த்தி ‘கஜசம்ஹாரமூர்த்தி’ யாவார்.
யானை– அதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை, சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது. நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது. இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்– யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார். அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, ‘சிவபராக்ரமம்‘ என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.
வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,(வள்ளலார் கோயில்), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 228 846, 242 996
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வதாரண்யேஸ்வரர் (வள்ளலார்) | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
தீர்த்தம் | – | காவிரி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மயிலாடுதுறை | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர். ஆனால், நந்தி, சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனைச் சுமந்தபடி வந்தது. இதையடுத்து, நந்திக்கு, நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட, விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த சிவன்,”நந்தி! என்னால் தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே” என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி, மயக்கமடைந்து விழுந்தது. இதைப்பார்த்த சிவன் கருணை உள்ளத்துடன், “நந்தி. என்னை குறித்து உன்னிடம் கர்வம் ஏற்பட்டு விட்டது. இந்த பாவத்தை நீக்க, பூலோகத்தில் காவிரிக்கரையில் நீயும் தவம் செய். நான் குரு வடிவாய் (தெட்சிணாமூர்த்தி) காட்சியளிப்பேன்.