Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை

அருள்மிகு வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்

எண்ணற்ற கோயில்களை உடைய, ஆன்மிகக் களஞ்சியம் எனப் போற்றப்படும் பெருமைபெற்ற நகரம் காஞ்சிபுரம்.

நமது முன்னோர்கள் நமக்கு அளித்த சொத்துகள் மிக பழமைவாய்ந்த திருக்கோயில்கள் ஆகும். பாழடைந்த நிலையிலும், பொலிவும், கம்பீரமும் குன்றாது நிற்கும் மிகப் பெரிய திருக்கோயில்கள் பல; அன்னியர்களின் படையெடுப்பின்போது சூறையாடப்பட்டதாலும், இடிக்கப்பட்டதாலும் அழிந்து மண்ணோடு மறைந்து போயின பல தெய்வீகக் கலைக் கருவூலங்கள். இத்திருக்கோயில்கள் பல கவனிப்பாரற்று, விளக்கு ஏற்றக்கூட வழியில்லாமல் கிடக்கின்றன.

வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு

அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2627 2053, 2649 5883, 94444 61383

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெள்ளீஸ்வரர் (பார்க்கவேஸ்வரர்)
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சுக்ர தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 2000 வருடங்களுக்கு முன்
ஊர் மாங்காடு
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில், இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.