Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல், வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம்.

+91-4323-245 522 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரத்தினகிரீஸ்வரர் (இராஜலிங்கம், வாள்போக்கி நாதர்)
அம்மன் சுரும்பார்குழலி
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் காவேரி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, இரத்தினகிரி
ஊர் அய்யர் மலை
மாவட்டம் கரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை. ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது. இறைவன் 9(நவ) ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சைக் கற்கள், சிவப்புக் கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன.

சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1178 அடி உயரமும், 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கியப் பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம்

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம், திருச்சி மாவட்டம்.

+91- 431-252 0126 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி
தல விருட்சம் வில்வம், கஸ்தூரி, அரளி
தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெடுங்களம்
ஊர் திருநெடுங்குளம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம்என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார். கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறிக் காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.