Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர்
அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91-4362-261 100, 262 222 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.
மூலவர் | – | பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம் | |
ஊர் | – | கண்டியூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், சம்பந்தர் |
பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்” என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இது சப்தஸ்தான தலத்தில் ஒன்று.
இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளகஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளகஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், “தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்” என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.
அருள்மிகு புட்(ஷ்)வனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி
அருள்மிகு புட்(ஷ்)வனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி, (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 – 4365 – 322 290, 94865 76529 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புட்(ஷ்)பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் | |
அம்மன் | – | சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பந்துருத்தி | |
ஊர் | – | மேலைத்திருப்பூந்துருத்தி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
முற்காலத்தில் அகத்தியரின் கமண்டலத்தைக் காகம் கவிழ்க்க, அதிலிருந்து தோன்றிய காவிரியான ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன.
இந்திரன் ஐயாறப்பரை வழிபட்டு, அவர் அருளால், காவிரியைக் கிழக்கு நோக்கி அழைத்துச்சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான். அவ்வாறு காவிரி கிழக்கு நோக்கி ஓடுகையில், முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததாய் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாகச் செய்தி. காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும், மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்ததாலும் இந்நிலப்பரப்பை “பூந்துருத்தி” என்று வழங்கிவந்தனர். இதனை “பொருத நீர்வரு பூந்துருத்தி” என்று அப்பர் கூறுகிறார். இதுபோல் ஆற்றிடையில் உண்டாகும் நிலப்பகுதிக்கு “துருத்தி” என்று பெயர். காவிரியில் கிழக்கே உண்டாகிய மற்றொன்றிற்கு “துருத்தி” (குற்றாலம்) என தற்காலம் வழங்குகின்றது. ஆதலால் நில அமைப்பு நோக்கி இப்பெயர் ஏற்பட்டது எனலாம்.