Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம்
அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 4374 267 237, 94436 78575, 94435 64221 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
தீர்த்தம் | – | சூல தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம் | |
ஊர் | – | திருச்சத்தி முற்றம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
“பக்தியே முக்திக்கு வித்து” என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக சக்தி, காவிரியாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணி சூல தீர்த்தத்தின் அருகே அமைந்துள்ள சக்திமுற்றத்தில் இறைவனை பூஜை செய்து வந்தாள். சிவன் காட்சி தர நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் பார்வதி உறுதி கலையாமல், தன் பக்தி நிலையானது என்று உறுதி செய்யும் வகையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டாள். சக்தியை சோதிக்க விரும்பி ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்தார் சிவன். தீப்பிழம்பாக காட்சி தந்தாலும், அதில் ஈசன் இருப்பதை உணர்ந்த பார்வதி அந்த நெருப்பைக் கட்டித்தழுவினாள். சிவன் குளிர்ந்து போனார். குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பெனத் தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் பரஸ்பர அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு தம்பதிகளுக்கு காட்டுகிறது.
இவ்வாலயத்தில் உள்ள சிவனை பார்வதிதேவி
பூஜை செய்து, தழுவி முத்தமிட்ட காரணத்தினால் இத்தலம் “திருச்சத்திமுத்தம்” என பெயர் பெற்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் அம்மன் சிவலிங்கத்தை கட்டி தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தை இன்றும் தரிசிக்கலாம். சுவாமி சன்னதியின் வாசலின் வட புறத்தில் சக்தி முத்தமளிக்கும் தல ஐதிக மூர்த்தியும் உள்ளனர். இவ்வைதீகச் சிற்பத்தின் பின்புறம் அம்மன் ஒரு காலில் நின்று தவம் செய்யும் காட்சியையும் காணலாம். காஞ்சியில் அம்பிகை இறைவனைத் தழுவியிருப்பது போலவே இத்தலத்திலும் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த தலம். இத்தலத்தில் அமாவாசை, பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாகும்.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்.
+91 94863 03484 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை, பங்கஜவல்லி | |
தல விருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்) | |
ஊர் | – | ஆவூர் (கோவந்தகுடி) | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு “கவர்தீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை, காமதேனுவின் கன்றான “பட்டி” என்ற பசு உணர்ந்தது. ஒரு இலிங்கம் அமைத்து, தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே அவரை நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் “பசுபதீஸ்வரர்” என்றும் அழைக்கப்பட்டார்.
வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். காமதேனு உலகிற்கு வந்த இடம் – கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று. கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.