Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 435-246 8001 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர் | |
அம்மன் | – | ஞானாம்பிகை, ஞானவல்லி | |
தல விருட்சம் | – | மாவிலங்கை | |
தீர்த்தம் | – | மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | உடையார் கோயில் | |
ஊர் | – | திருச்சேறை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர் |
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு இலிங்கம் தாபித்து, வணங்கி வந்தார். அந்த இலிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.
(ரிண– கடன், விமோசனம் – நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் – ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும், வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே “ரிண விமோசன லிங்கேஸ்வரர்” ஆகும். இவரை, 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்.
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 99435 23852 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் | |
அம்மன் | – | அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி | |
தீர்த்தம் | – | எம தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் | |
ஊர் | – | கருக்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர் |
இராமாயண காலத்தில் இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வரத் தாமதமானதால், இராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் இலிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும். அனுமன் கொண்டு வந்த இலிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.
தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.