Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91-4374-316 911, 4374-275 441
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சாட்சிநாதர் | |
அம்மன் | – | சவுந்தர நாயகி | |
தல விருட்சம் | – | பாதிரி | |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரணி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சாட்சிநாதபுரம் | |
ஊர் | – | அவளிவணல்லூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
இத்தல இறைவனைப் பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இதில் மூத்த பெண் சுசீலையை அரசவைப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களைத் தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது, சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, கண்பார்வை இல்லாமல் அழகிழந்து காணப்பட்டாள். இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளைத் தன் மனைவியாக நினைத்து அழைத்தார். அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையைக் கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன், சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து “அவள் தான் இவள்” என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் “அவளிவணல்லூர்” எனவும், இறைவன் “சாட்சிநாதர்” எனவும் ஆனார்கள்.
மூலஸ்தானத்தில் சிவன் இரிடபாரூடராய்க் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து, செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில், தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார். சிவனின் “பஞ்ச ஆரண்யம் (காடு)” தலங்களில் இதுவும் ஒன்று.
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், நாலூர் மயானம், திருச்சேறை, திருமெய்ஞானம்
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், நாலூர் மயானம், திருச்சேறை, திருமெய்ஞானம், குடவாசல் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94439 59839 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் | |
அம்மன் | – | ஞானாம்பிகை, பெரிய நாயகி | |
தல விருட்சம் | – | பலாசு, வில்வம் | |
தீர்த்தம் | – | ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர் | |
ஊர் | – | திருமெய்ஞானம் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க, இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று. மற்ற மூன்றும் கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம் என்பவை.
சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை. இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.