Category Archives: சென்னை
அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி
அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை, சென்னை மாவட்டம்.
+91- 44 – 2226 4337, 98419 41819
(மாற்றங்களுக்குட்பட்டவை)
வீரபத்திரர் (செல்லியம்மன்) சன்னதி காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 .30 மணி வரையும், தண்டீஸ்வரர் சன்னதி காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு– 8.30 மணி திறந்திருக்கும்.
மூலவர் | – | தண்டீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | கருணாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | எமதீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேதஸ்ரேணி | |
ஊர் | – | வேளச்சேரி | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டித் தவமிருந்தன. அவற்றிற்கு காட்சி தந்த சிவன், தோஷம் நீக்கி அருளினார். வேதங்கள் வழிபட்டதால் “வேதச்சேரி” என்றழைக்கப்பட்ட தலம் பிற்காலத்தில், “வேளச்சேரி” என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப்பெயர்.
வீரபத்திரருக்கு தண்டாயுதம் என்ற உலக்கை போன்ற ஆயுதமே தரப்பட்டிருப்பது மரபு. இவரை நின்ற கோலத்திலேயே பார்க்க முடியும். ஆனால், சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம். இவர் கன்னிப்பெண்களைக் காக்கும் தெய்வமாக அருளுகிறார். அசுரன் ஒருவனை அழிக்கச்சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். தங்களை அழிக்க ஏழு கன்னிகள் புறப்பட்டிருக்கும் செய்தியை அந்த அசுரனும் அறிந்து கொண்டான். முனிவரைக் கொன்ற தோஷம் ஒருபுறம், அசுரனின் மிரட்டல் மறுபுறமுமாக இருந்த வேளையில், சிவபெருமான், அவர்களைக் காக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார். வீரபத்திரர் கன்னியர்களை காத்ததோடு, அசுரனையும் அழித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சப்த கன்னியர் அருகில் வீரபத்திரர் காவல் தெய்வமாக இருக்கிறார். வீரபத்திரர், வலது காலை மடக்கி அமர்ந்திருக்கிறார். கைகளில் தண்டத்திற்கு பதிலாக உருத்ராட்ச மாலை மற்றும் மழு (கோடரி போன்ற ஆயுதம்) ஏந்தியிருக்கிறார். பீடத்தில் நந்தி இருக்கிறது. பவுர்ணமியில் இவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடக்கிறது. கன்னியரைக் காத்த கடவுள் என்பதால், பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி வேண்டிக்கொள்கிறார்கள். சப்தகன்னியரில் ஒருத்தியான சாமுண்டியை, செல்லியம்மனாக பாவித்து வழிபடுகிறார்கள். சப்தகன்னியர் சன்னதியை, “செல்லியம்மன் சன்னதி” என்றே அழைக்கின்றனர். வீரபத்திரர் எதிரே விநாயகர் இருக்கிறார்.
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை, சென்னை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயப்பன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இராஜா அண்ணாமலைபுரம் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில், அதே போன்றதொரு ஆலயத்தை எழுப்பி, நெகிழ்ந்துபோனார். இந்தக் கோயிலுக்கு வந்து, இறைவனைத் தரிசிக்கும் அனைவரும் சிலிர்ப்பும் மகிழ்ச்சியும் பொங்கச் செல்கின்றனர். கேரளப் பாரம்பரிய முறைப்படி பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த 18 படிகளைக் கடந்து சென்றால் கண்குளிரும் வகையில் அமர்ந்துள்ள சாஸ்தாவை தரிசனம் செய்யலாம். கேரளா சபரிமலை தோற்றத்தைப் போல் உள்ளதால் இவ்வாலயத்தை வடசபரிமலை என்று அழைக்கின்றனர். கடும் விரதமிருந்து, பஜனைகள் பாடி, அன்னதானமிட்டு, இருமுடி கட்டி யாத்திரை மேற்கொண்டு சபரிமலைக்குச் சென்று ஐயப்ப தரிசனம் செய்வதுபோலவே, ராஜா அண்ணாமலை ஐயப்பன் கோயில் ஐயனைத் தரிசிக்கவும் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். பஜனைப் பாடல்கள் பாடி, அன்னதானம் வழங்குகின்றனர். இருமுடி கட்டிக்கொண்டு, கோயிலுக்கு வந்து, இவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 18 படிகளில் ஏறி, ஸ்வாமியைத் தரிசித்து செல்கின்றனர். இருமுடி இன்றி வருகிறவர்களுக்கெனத் தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு தினப்படி பூஜைகளும் இதர வழிபாடுகளும், சபரிமலை தேவஸ்தானத்தில் நடப்பது போலவே நடைபெறுகின்றன.