Category Archives: சென்னை
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை, சென்னை மாவட்டம்.
+91 -44-2498 5112, 2466 2039, 94440 18239 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 4.39 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாதவப்பெருமாள் | |
உற்சவர் | – | அரவிந்த மாதவன் | |
தாயார் | – | அமிர்தவல்லி | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | சந்தானபுஷ்கரிணி | |
ஆகமம் | – | வைகானசம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மாதவபுரம் | |
ஊர் | – | மயிலாப்பூர் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருமாலின் சாந்த குணத்தைச் சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி, சுவாமியை பிரிந்தார். தன் தவறுக்குப் பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். இலட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, “அமிர்தவல்லி” எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.
இங்குள்ள மூலவர் அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது. மூலவரின் விமானம் ஆனந்த நிலை என அழைக்கப்படுகிறது. வேதவியாசர் நாரதரிடம் பூலோகில் தோஷம் இல்லாத தலம் எது என்று கேட்க, அவர் இத்தலத்தை கூறினாராம். அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், “சந்தான புஷ்கரிணி” என்றழைக்கப்படுகிறது.
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை மாவட்டம்.
+91-44 2464 3873, 2494 3873, 94440 35591 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிகேசவப்பெருமாள் | |
உற்சவர் | – | ஆதிகேசவர் | |
தாயார் | – | மயூரவல்லி | |
தல விருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | சந்திர புஷ்கரிணி (சர்வ தீர்த்தம்) | |
ஆகமம் | – | வைகானசம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மயூரபுரி | |
ஊர் | – | மயிலாப்பூர் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திரேதாயுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவிணி புஷ்கரிணியின் கரையில் மகரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். இதனால், மகரிஷிகள், அசுரனை அழித்து யாகம் நடத்திட அருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, அசுரனை அழிப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், யாகத்தை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். அதன்படி மகரிஷிகள், யாகத்தை தொடர்ந்தனர். அசுரன் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு, மகரிஷிகளின் வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். இவரே இத்தலத்தில், “ஆதி கேசவப்பெருமாள்” என்ற பெயரில் அருளுகிறார்.
முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த தலம் இது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளைப் பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தது. இவர் “மகதாஹ்வயர்” என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் பெருமாளுக்குத் தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், “பேயாழ்வார்” என்று பெயர் பெற்றார்.