Category Archives: சென்னை
அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம்
அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம், சென்னை.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாண கந்தசுவாமி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மடிப்பாக்கம் | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர். நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.
+91 – 44 – 2223 5319, 93805 10587.
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுவாமிநாதசுவாமி | |
உற்சவர் | – | பால சுப்பிரமணியர் | |
தலவிருட்சம் | – | அரசு | |
தீர்த்தம் | – | குமார தீர்த்தம் | |
ஆகமம் | – | காரணாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | குமரன்குன்றம், குரோம்பேட்டை | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டது. “சுவாமிநாதன்” என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, “ஜெயமங்களதன்மகாளி” என்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும்(ஜெயம்), மங்களமும் சாந்தமாகத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்காரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேசுவரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். இலிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை “தன்பாதம் தூக்கிய நடராஜர்” என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.