Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்– சேலம் மாவட்டம்.
***********************************************************************************************
+91- 4290 – 252 100 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – மாரியம்மன், காளியம்மன்
தல விருட்சம்: – வேம்பு
தீர்த்தம்: – சஞ்சீவி தீர்த்தம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – கண்ணனூர்
மாநிலம்: – தமிழ்நாடு
பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளாவிலுள்ள கண்ணனூர் மாரியம்மனை, சில பக்தர்கள் ஒரு குதிரையில் வைத்து இவ்வழியே கொண்டு சென்றனர். அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, ஓய்வெடுப்பதற்காக தங்கினர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்தின் அடியில் சுயம்பு வடிவில் இருப்பதாகவும், அந்த இடத்திலேயே கோயில் கட்டும்படியும் கூறினாள். அந்த பக்தர் கனவில் கண்டதை மக்களிடம் கூறினார்.
அதன்படி, அம்பாள் சிலை இருந்த இடத்தின் அடியில் தோண்டிப் பார்த்தனர். அவ்விடத்தில் அம்பாள் சிலை இருந்தது. அவளை, அங்கேயே வைத்து கோயில் கட்டினர்.
கண்ணனூரில் இருந்து அம்பாளை கொண்டு வந்தபோது கிடைக்கப்பெற்ற அம்மன் என்பதால் இவள், “கண்ணனூர் மாரியம்மன்” என்று அழைக்கப்பட்டாள். கண்ணனூரில் இருக்கும் மாரியம்மனின் அம்சத்தை இக்கோயிலில் காணலாம்.
தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள்.
பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. இக் கோயில் கேரள கோயிலின் அமைப்பில் இருப்பது சிறப்பு. இங்கு அம்மனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர்
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர் – 625 518 தேனி மாவட்டம்.
********************************************************************************
+91- 4554 – 231 019, 98425 55575 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – கண்ணகி (பகவதி அம்மன்)
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – கூடலூர்
மாநிலம்: – தமிழ்நாடு
சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து, தன் கணவன் கோவலனுடன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தாள். சந்தர்ப்பவசத்தால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் கால்சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி மன்னனிடம் சென்று நியாயம் கேட்டாள். தன் தீர்ப்பில் தவறு இருந்ததை உணர்ந்த மன்னனும், அவனது மனைவியும் உயிர் விட்டனர்.
ஆனாலும், உக்கிரம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள்.
பிறகு, தென்திசை வழியாக 14 நாட்கள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து மலர் விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளைத் தெய்வமாக பாவித்து “மங்கல தேவி” என்ற பெயரில் வணங்கினர்.