Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம்-625 601, தேனி மாவட்டம்.
********************************************************************************************
+91- 4546- 234171 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – கவுமாரியம்மன் (குழந்தை மாரியம்மன், காட்டு மாரியம்மன்)
தல விருட்சம்: – அரசமரம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – குளந்தை மாநகர்
ஊர்: – பெரியகுளம்
மாநிலம்: – தமிழ்நாடு
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்புவாகத் தோன்றிய மாரியம்மன், தற்போதைய பெரியகுளம் நகரின் கிழக்கே இருந்த காட்டிற்குள் கோயில் கொண்டிருந்தாள்.
அச்சமயத்தில் அதிக மழையால் ஊரில் உள்ள கண்மாயில் நீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் மூழ்கி மக்கள் சிரமப்பட்டனர். இன்னல் தீர காட்டு மாரியம்மனை பக்தர்கள் மனம் உருகி வணங்கினர்.
அப்போது பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன் ஊரின் எல்லையில் அமைந்து, ஊரை நோக்காமல் புறத்தை நோக்கியபடி தாம் அமைந்திருப்பதாலேயே இவ்வாறு சேத நிகழ்வுகள் நடப்பதாக உணர்த்தினாள்.
அதன்பின், பொதுமக்கள் அனைவரும் மாரியம்மன் வீற்றிருந்த காட்டுப்பகுதியை சீரமைத்து அங்கே இடம் பெயர்ந்தனர். அதன் பின் அம்மனின் அருளால் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அத்துடன் அம்மனுக்கு கோயில் கட்டி “கவுமாரி” என அழைக்க தொடங்கினர்.
சுயம்புவாகத் தோன்றிய கவுமாரியம்மன் வளம் கொழிக்கும் வராக நதியின் தென்கரையில் வீற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறாள்.
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம் – 625 516. தேனி மாவட்டம்.
**************************************************************************************
+91- 99441 16258, 97893 42921.
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வேம்பு
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – கம்பம்
மாநிலம்: – தமிழ்நாடு
ஒருசமயம் இப்பகுதியில் மக்களுக்கு கொடிய நோய்கள் உண்டாகவே, மக்கள் அல்லலுற்றனர். அவ்வேளையில் பெண் ஒருத்தி கம்பத்துக்கு வந்தாள். தற்போது கோயில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்ட அவள், நோயாளிகளை அழைத்து வேப்பிலையையும், மஞ்சளையும் கொடுத்தாள். அதனால் பலருக்கும் நோய் குணமாகியது. வியந்த மக்கள் அவளிடம், “எங்களுக்கு வைத்தியம் பார்க்கும் நீ யார்?” எனக்கேட்டனர்.
அவள் உடனே அம்பிகையாக சுயரூபம் காட்டினாள். பக்தர்களின் வேண்டுதலுக்காக இங்கேயே சுயம்பு வடிவில் எழுந்தருளினாள். பின்பு, சுயம்புவை சுற்றிக் கோயில் எழுப்பப்பட்டது.
பிற்காலத்தில் சுயம்பு அம்பிகைக்கு பின்புறம், மாரியம்மன் சிலை வடித்துப் பிரதிட்டை செய்து, கோயில் எழுப்பினர்.
பிரகாரத்தில் நாகர், அனுக்ஞை விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னதிகள் இருக்கிறது.