Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம்
அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில் கஞ்சாம், மைசூரு கர்நாடகா.
*****************************************************************************
+91 8236 252 640, 98458 01632 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நிமிஷாம்பாள் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | கஞ்சாம் |
மாவட்டம் | – | மைசூரு |
மாநிலம் | – | கர்நாடகா |
முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத் தொடங்குவான். ஒருசமயம், ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனையும், அவன் நாட்டு மக்களையும் துன்புறுத்தினான். முக்தராஜனால் அவனை அடக்க முடியவில்லை. மனிதசக்தியால் இயலாதபோது, தெய்வீக சக்தியின் துணையை நாடுவதே பக்தியின் படிநிலை. தனக்கு விருப்பமான தெய்வமாகிய பராசக்தியை நோக்கி, உணவு, நீரின்றித் தவத்தில் ஆழ்ந்தான். உயிர் மட்டும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்க உடல் கரைந்து விட்டது. உயிரையும் பொருட்படுத்தாமல், தன் மீது பக்தி செலுத்திய அரசனைக் கண்டு, பராசக்தி உக்ரரூபம் எடுத்து பூமிக்கு வந்தாள். மன்னனுக்கு காட்சி கொடுத்தாள். அநியாய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த பொதுநல கோரிக்கையை ஏற்றாள். ஜானு சுமண்டலன் முன்பு சென்று, கண்ணை மூடித் திறந்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பாலாகி விட்டான். மன்னன், தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு, அசுரவதம் நடந்த இடத்தில் கோயில் எழுப்பினான். என்றென்றும் அஙகேயே தங்கியிருக்க வேண்டினான். மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கவும், அவர்களின் பொதுநலக் கோரிக்கைக்கு உடனடியாக அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். கணநேரத்தில் அருள்புரியும் அம்பிகை என்னும் பொருளில் நிமிஷாம்பாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம்
அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம், எர்ணாகுளம் மாவட்டம்
காலை 5- 9 மணி, மாலை 5.30 – இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
நீங்கள் கோயிலுக்குப் போனால் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் இன்னும் சிலவற்றை நைவேத்யமாக படைத்திருப்பீர்கள். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக் குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயிலில், நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் தினமும் அம்மனுக்கு மருந்து நைவேத்யமும் செய்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லிக்காட்டு இல்ல பரம்பரை நம்பூதிரிகள் வைத்தியம் செய்து வந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரின் கனவில் நோய் தீர்க்கும் தெய்வமான, தன்வந்திரி தோன்றி, “தளிக்குந்நு” என்ற இடத்தில் பலர் நோயால் அவதிப்படுகின்றனர். நீங்கள் சென்று காப்பாற்றுங்கள். அங்கு நிரந்தரமாக தங்குங்கள். மேற்கு நோக்கிய சிவன் கோயில் அங்கு இருக்கும்,” என்றார்.
பெரியவர் நம்பூதிரி, இந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க நெல்லிக்காட்டு குடும்பம் தளிக்குந்நு நோக்கி புறப்பட்டது. கூடவே தங்கள் குடும்பக் கடவுளான அம்மன் விக்ரகத்தையும் எடுத்துச் சென்றனர். வழியில் ஒரு முனிவர் குறுக்கிட்டு வழிகாட்டினார். அவர்கள் தளிக்குந்நு சிவன் கோயில் அருகில் கூத்தாட்டுகுளம் என்ற இடத்தில் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த நம்பூதிரி குடும்பம் விஷக் கடிக்கு சிகிச்சை செய்வதில் பிரபலமானது. எனவே பாம்பு கடித்து ஒருவர் சிகிச்சைக்கு வந்த போது, புதிய இடத்தில் சிகிச்சை தரச் சற்று தயங்கிய நம்பூதிரி பின்னர் சிகிச்சை அளித்தார். வந்தவர் குணமடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அங்குள்ள கால்நடைகள் எல்லாம் இறந்தன. இதனால் தலைமை நம்பூதிரி மனம் உடைந்து தொடர் பஜனை பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஏற்கனவே சந்தித்த முனிவர் வந்து, இனி விஷக்கடிக்கு சிகிச்சை தர வேண்டாம், கண் சிகிச்சை செய்யுங்கள்” என்று கூறி கண் மருத்துவத்திற்கான ஓலைச் சுவடிகளை அவரிடம் தந்தார். முனிவரது கட்டளைப்படி தங்களோடு எடுத்து வந்த பகவதி(பத்ரகாளி) அம்மன் விக்ரகத்தை கூத்தாட்டு குளத்தில் பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.