Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு

அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-479-2410690 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முருகன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஹரிப்பாடு
மாவட்டம் ஆழப்புழா
மாநிலம் கேரளா

சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு துளிக்கு ஒரு அசுரர் வீதம் உருவாகி உலகை நாசமாக்கினர். இத்தகைய மாயக்காரனான சூரனை அழிக்க ஏழு மாத குழந்தையால்தான் (தமிழகத்தில் சிறுவனாய் இருந்த போது சூரனை அழித்ததாகச் சொல்வோம். கேரளாவில், ஏழு மாதக் குழந்தை என்கிறார்கள்) முடியும் என்ற நிபந்தனையுடன் அவனுக்கு பிரம்மனால் வரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவாக்கிய ஆறு பொறிகள் இணைந்து, கார்த்திகேயன் என்ற குழந்தை உருவாயிற்று. இக்குழந்தையை ஏழுமாதம் வரை பார்வதி பாதுகாத்தாள். பின்னர் இக்குழந்தை பற்றி அறிந்த சூரன் அதை அழிக்க வந்தான். விஸ்வரூபம் எடுத்த அக்குழந்தை சூரனை அழித்தது. பின்னர் வளர்ந்த அக்குழந்தை பல லீலைகளைச் செய்தது. தந்தைக்கே பாடம் கற்றுக் கொடுத்தது. படைக்கும் தொழிலை சிலநாள் ஏற்றுக் கொண்டது. பல தலங்களுக்கும் சென்றது. பரசுராமர் உருவாக்கிய கேரளாவிற்கு அக்குழந்தை சென்ற போது வெற்றி வீரரான அச்சிறுவனை வாழ்த்திப் பாடல்கள் பாடி வரவேற்றார் விஷ்ணு. அப்பாடல்கள் ஹரிப்பாடல்கள்எனப்பட்டன. அவர் பாடிய இடத்திற்கு ஹரிப்பாடுஎன்ற பெயர் உண்டாயிற்று. தன் மருமகனை அத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்படி விஷ்ணு கேட்டுக் கொண்டதன்படி முருகன் அத்தலத்தில் அமர்ந்தார்.

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம்.

+91- 427 – 240 064 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

உற்சவர்

சண்முகர்

தலவிருட்சம்

பொன்அரளி

தீர்த்தம்

குமரதீர்த்தம்

ஆகமம்

காரண ஆகமம், காமீக ஆகமம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

குமரகிரி

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்குத் தரவேண்டுமெனக் கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்குச் சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை. இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, “மாம்பழ முருகன்என்றும் அழைக்கிறார்கள்.