Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி
அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி, சேலம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
ஞானஸ்கந்தர், குருநாதர் |
|
அம்மன் | – |
ஸ்கந்தமாதா, பராசக்தி |
|
தலவிருட்சம் | – |
கடம்ப மரம் |
|
தீர்த்தம் | – |
உத்திரவாகினி, கன்னிமார்ஓடை |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
உடையாபட்டி |
|
மாவட்டம் | – | சேலம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான், தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி, இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.
முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்(இதயம்), முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என்று, ஜோதிட சாஸ்திரப்படி, முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் உள்ளது.
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 44- 2744 6226, 90031 27288 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
கந்தசுவாமி |
|
அம்மன் | – |
புண்ணியகாரணியம்மன் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – |
தாருகாபுரி, சமராபுரி |
|
ஊர் | – |
திருப்போரூர் |
|
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு “கந்தசுவாமி” என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர். கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் இயந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த இயந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த இயந்திரத்திற்குப் பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த இயந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.