Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி மாவட்டம்.
+91- 423- 250 9353 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
தண்டாயுதபாணி |
|
தலவிருட்சம் | – |
அரசமரம் |
|
பழமை | – | 30 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
மஞ்சூர் |
|
மாவட்டம் | – | நீலகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
30 வருடங்களுக்கு முன்பு குரு கிருஷ்ண நந்தாஜி என்பவர் இங்குள்ள காடுகளில் சுற்றித்திரிந்துவிட்டு இப்போதுள்ள மலைக்கு அருகில் உள்ள சிவன் குகைக்குள் சிலகாலம் கடும் தவம் மேற்கொண்டார். பின்பு அழகிய எழில் சூழ்ந்த அன்னமலைக் குன்றில், தண்டாயுதபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். நாளடைவில் முருகப்பெருமானின் அருள் பரவ, இக்கோயில் பிரபலமடையத் தொடங்கியது. அமைதியும் எழில் சூழ்ந்த மலைக்குன்றுகளும் அமைந்து காண்பவர் கண்களையும் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும்மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது. படுகர் இன மக்கள் இங்கு பஜனை நடத்துகின்றனர். இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் (ஆண்டி அலங்காரம், சர்வ அலங்காரம், ராஜ அலங்காரம்… இன்னும் பிற) முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.
+91-4294 – 250223 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்ரமணியசுவாமி (தண்டாயுதபாணி) | |
அம்மன் | – | அமிர்த வல்லி, சுந்தர வல்லி | |
தலவிருட்சம் | – | புளியமரம் | |
தீர்த்தம் | – | மாமாங்கம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | – | புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி | |
ஊர் | – | சென்னிமலை | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு, தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில், மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. மலை 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சனத் தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.