Category Archives: ஆலயங்கள்
நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க
நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க
சாதாரண மனித வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த உடல் இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக நரம்புத்தளர்ச்சி (ஹிஸ்டீரியா) நோயாளிகளிடம் காண முடியும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாகத் தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.
இளம் வயது போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
சிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.
கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் – படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் – அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.
திருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.
- 1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)
- 2. வலிப்புகள் (Convulsion)
- 3. நினைவு மாற்றங்கள் (Dissociative changes)
- 4. இரட்டை வாழ்க்கை (Dual personality)
- 5. பன்முக வாழ்க்கை (Multiple personality)
- நன்றி விக்கிபீடியா
இதை மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல. ஆகவே, இதனை எளிய மூலிகை மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் நரம்புத் தளர்ச்சியினால் தனது வாழ்வே இருளாகிவிட்டது என்று தவறாகப் புலம்பக் கூடாது. குடிப்பழக்கம் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இவர்கள் வெந்நீர் குளியல் செய்யலாம். ஒரே வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்தாருடன் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மனதை வேலைகளில் இருந்து விலக்கி வைத்து குடும்பம், மனைவி, மக்கள் என்று ஈடுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மனதளவிலான நரம்புத்தளர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறலாம்.
வசம்பை தூளாக்கி சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடிக்கலாம். சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
அத்துடன் சேலத்தில் உள்ள அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுவர நோயின் தாக்கம் சிறிது சிறிதாகக் குறைகிறது என்கின்றனர் சேலம்வாசிகள்.
தோஷங்கள் நீங்க
தோஷங்கள் நீங்க
செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகத் தோஷங்கள்; இன்னும் எத்தனையோ தோஷங்கள்.
பிரம்ம ஹத்தி தோஷம் என்பது சாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படும். கொலை செய்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புணர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும். பின்னர் வந்தவர்கள், “குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துபவர்களுக்கு இந்த பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும்” என்று சேர்த்துக்கொண்டனர். அறியாமையில் திளைக்கு மனிதர்களிடமிருந்து பணம் பறிக்க தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தோஷங்களைப் படைத்துக்கொண்டனர் ஒரு சாரார்.
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது.
பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.
தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே இன்னல் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இராமநாதபுரம் |
இராமநாதபுரம் |
|
நட்டாற்றீஸ்வரர் | காங்கயம்பாளையம் | ஈரோடு |
பூவராக சுவாமி | ஸ்ரீமுஷ்ணம் | கடலூர் |
திருவனந்தீஸ்வரர் | காட்டுமன்னார் கோயில் | கடலூர் |
நரசிம்மர் | சிங்கிரிகுடி | கடலூர் |
வெண்ணெய் மலை |
கரூர் | |
ஆட்சீஸ்வரர் | அச்சிறுபாக்கம் | காஞ்சிபுரம் |
தெய்வநாயகேஸ்வரர் | எலுமியன்கோட்டூர் | காஞ்சிபுரம் |
சத்யநாதசுவாமி | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் |
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் | திருக்கச்சூர் | காஞ்சிபுரம் |
பாண்டவதூதப் பெருமாள் | திருப்பாடகம் | காஞ்சிபுரம் |
பிரசன்ன வெங்கடேசர் | திருமலைவையாவூர் | காஞ்சிபுரம் |
நித்ய கல்யாணபெருமாள் | திருவிடந்தை | காஞ்சிபுரம் |
நிலாத்துண்டப்பெருமாள் | நிலாதிங்கள் | காஞ்சிபுரம் |
வல்லக்கோட்டை |
காஞ்சிபுரம் |
|
திருஊரகப்பெருமாள் | குன்றத்தூர் | காஞ்சிபுரம் |
பாடலாத்ரி நரசிம்மர் | சிங்கப்பெருமாள்கோயில் | காஞ்சிபுரம் |
தாம்பரம் |
காஞ்சிபுரம் |
|
சித்தி விநாயகர் | பாகலூர் | கிருஷ்ணகிரி |
அவிநாசியப்பர் | அவிநாசி | கோயம்புத்தூர் |
மொக்கணீஸ்வரர் | கூழைய கவுண்டன்புதூர் | கோயம்புத்தூர் |
கல்யாணவரதராஜர் | கொழுமம் | கோயம்புத்தூர் |
ஆதீஸ்வரர் | பெரியகளந்தை | கோயம்புத்தூர் |
முருகன் |
வேல்கோட்டம் |
கோயம்புத்தூர் |
இடுகம்பாளையம் |
கோயம்புத்தூர் |
|
மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சேக்கிழார்) | தேவகோட்டை | சிவகங்கை |
பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) | கீழப்பூங்குடி | சிவகங்கை |
சிங்கம்புணரி |
சிவகங்கை |
|
கந்தசுவாமி | கந்தகோட்டம் | சென்னை |
குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) | கோயம்பேடு | சென்னை |
ஆதிபுரீஸ்வரர் | திருவொற்றியூர் | சென்னை |
பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் | மேற்கு சைதாப்பேட்டை | சென்னை |
வைகுண்டவாசப்பெருமாள் | கோயம்பேடு | சென்னை |
பிரசன்ன வெங்கடாஜலபதி | செவ்வாய்ப்பேட்டை | சேலம் |
ஆபத்சகாயேஸ்வரர் | ஆடுதுறை | தஞ்சாவூர் |
ஆகாசபுரீஸ்வரர் | கடுவெளி | தஞ்சாவூர் |
ஹரசாப விமோசன பெருமாள் | கண்டியூர் | தஞ்சாவூர் |
கோடீஸ்வரர், கைலாசநாதர் | கொட்டையூர் | தஞ்சாவூர் |
சத்தியகிரீஸ்வரர் | சேங்கனூர் | தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
|
சிவக்கொழுந்தீசர் | திருச்சத்தி முற்றம் | தஞ்சாவூர் |
கற்கடேஸ்வரர் | திருந்துதேவன்குடி | தஞ்சாவூர் |
யோகநந்தீஸ்வரர் | திருவிசநல்லூர் | தஞ்சாவூர் |
வஜ்ரகண்டேஸ்வரர் | வீரமாங்குடி | தஞ்சாவூர் |
அபயவரதீஸ்வரர் | அதிராம்பட்டினம் | தஞ்சாவூர் |
திருவானேஷ்வர் | அரங்கநாதபுரம் | தஞ்சாவூர் |
பிரம்மஞான புரீஸ்வரர் | கீழக்கொருக்கை | தஞ்சாவூர் |
வரதராஜப்பெருமாள் | பசுபதி கோயில் | தஞ்சாவூர் |
அட்சயபுரீஸ்வரர் | விளங்குளம் | தஞ்சாவூர் |
சோலிங்கசுவாமி | சோமலிங்கபுரம், கன்னிவாடி | திண்டுக்கல் |
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி | திண்டுக்கல் | திண்டுக்கல் |
பழநி |
திண்டுக்கல் | |
தண்டாயுதபாணி | பழனி | திண்டுக்கல் |
கதிர் நரசிங்க பெருமாள் |
வி.மேட்டுப்பட்டி |
திண்டுக்கல் |
மகாலிங்கேஸ்வரர் | விராலிப்பட்டி | திண்டுக்கல் |
சின்னாளபட்டி |
திண்டுக்கல் |
|
உத்தமர் | உத்தமர் கோவில் | திருச்சி |
பஞ்சவர்ணேஸ்வரர் | உறையூர் | திருச்சி |
தசாவதாரக் கோயில் | ஸ்ரீரங்கம் | திருச்சி |
மாங்கல்யேஸ்வரர் | இடையாற்று மங்கலம் | திருச்சி |
கைலாச நாதர் | காருகுடி | திருச்சி |
திருக்காமேஸ்வரர் | வெள்ளூர் | திருச்சி |
ஆய்க்குடி |
திருநெல்வேலி | |
மதுநாதசுவாமி | இலத்தூர் | திருநெல்வேலி |
கோத பரமேஸ்வரர் | குன்னத்தூர் | திருநெல்வேலி |
நெல்லையப்பர் | திருநெல்வேலி | திருநெல்வேலி |
பண்பொழி |
திருநெல்வேலி | |
சதாசிவ மூர்த்தி | புளியறை | திருநெல்வேலி |
கடையநல்லூர் |
திருநெல்வேலி |
|
வரதராஜப்பெருமாள் | சங்காணி | திருநெல்வேலி |
இராஜகோபால சுவாமி | மன்னார்கோயில் | திருநெல்வேலி |
சந்தவாசல் |
திருவண்ணாமலை |
|
வாழைப்பந்தல் |
திருவண்ணாமலை |
|
தீர்க்காஜலேஸ்வரர் | நெடுங்குணம் | திருவண்ணாமலை |
உத்தமராயப்பெருமாள் | பெரியஅய்யம்பாளையம் | திருவண்ணாமலை |
வாசீஸ்வரர் | திருப்பாசூர் | திருவள்ளூர் |
படம்பக்கநாதர் | திருவொற்றியூர் | திருவள்ளூர் |
விண்ணவராய பெருமாள் | பழைய அம்பத்தூர் | திருவள்ளூர் |
சிங்கீஸ்வரர் | மப்பேடு | திருவள்ளூர் |
முக்தீஸ்வரர் | சிதலப்பதி | திருவாரூர் |
கிருபாசமுத்திரப்பெருமாள் | திருச்சிறுபுலியூர் | திருவாரூர் |
அக்னிபுரீஸ்வரர் | திருப்புகலூர் | திருவாரூர் |
தேவபுரீஸ்வரர் | தேவூர் | திருவாரூர் |
ஆதிநாராயணப்பெருமாள் | எண்கண் | திருவாரூர் |
பூவனாதர் (செண்பகவல்லி) | கோவில்பட்டி | தூத்துக்குடி |
கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் | கம்பம் | தேனி |
முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி மற்றும் இராஜகோபாலசுவாமி ஆலயம் | அனந்தமங்கலம் | நாகப்பட்டினம் |
வீரட்டேஸ்வரர் | கீழப்பரசலூர் | நாகப்பட்டினம் |
கேடிலியப்பர் | கீழ்வேளூர் | நாகப்பட்டினம் |
ஆதிகும்பேஸ்வரர் | செண்பகபுரம் | நாகப்பட்டினம் |
நாண்மதியப்பெருமாள் | தலச்சங்காடு | நாகப்பட்டினம் |
மகாலட்சுமீஸ்வரர் | திருநின்றியூர் | நாகப்பட்டினம் |
வரதராஜப்பெருமாள் | திருமணிக்கூடம் | நாகப்பட்டினம் |
சவுந்தரராஜப்பெருமாள் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
வீரபத்திரசுவாமி | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
காத்ர சுந்தரேஸ்வரர் | கஞ்சாநகரம் | நாகப்பட்டினம் |
கிருபாகூபாரேச்வரர் | கோமல் | நாகப்பட்டினம் |
நாகேஸ்வரர் | பெரியமணலி | நாமக்கல் |
கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) | திருக்கோவ(க)ர்ணம் | புதுக்கோட்டை |
சுகந்த பரிமளேஸ்வரர் | திருமணஞ்சேரி | புதுக்கோட்டை |
அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) | திருவரங்குளம் | புதுக்கோட்டை |
கைலாசநாதர் (பிரசன்னநாயகி) | நெடுங்குடி | புதுக்கோட்டை |
நாகநாதர் | பேரையூர் | புதுக்கோட்டை |
கருப்பண்ண சுவாமி | ராங்கியம், உறங்காப்புளி | புதுக்கோட்டை |
நாமபுரீஸ்வரர் | ஆலங்குடி | புதுக்கோட்டை |
சகஸ்ரலட்சுமீஸ்வரர் | தீயத்தூர் | புதுக்கோட்டை |
திருக்காமீஸ்வரர் (கோகிலாம்பிகை) | வில்லியனூர் | புதுச்சேரி |
சுந்தரமகாலிங்க சுவாமி | சதுரகிரி | மதுரை |
நவநீத கிருஷ்ணர் (பிரசன்னவெங்கடேசர்) | தெற்குமாசி வீதி | மதுரை |
மதனகோபாலசுவாமி | மதுரை | மதுரை |
இம்மையிலும் நன்மை தருவார் | மேலமாசி வீதி – மதுரை | மதுரை |
சித்திர ரத வல்லபபெருமாள் | குருவித்துறை | மதுரை |
சித்திர ரத வல்லபபெருமாள் | குருவித்துறை | மதுரை |
மாயூரநாதர் சுவாமி | பெத்தவநல்லூர், இராஜபாளையம் | விருதுநகர் |
நம்பெருமாள் | சோலைக்கவுண்டன்பட்டி | விருதுநகர் |
அதுல்யநாதேஸ்வரர் | அறகண்டநல்லூர் | விழுப்புரம் |
லட்சுமி நரசிங்க பெருமாள் | திண்டிவனம் | விழுப்புரம் |
பாலமுருகன் | இரத்தினகிரி | வேலூர் |
செல்வ விநாயகர் | சேண்பாக்கம் | வேலூர் |
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் | திருப்பாற்கடல் | வேலூர் |