Category Archives: ஆலயங்கள்

நவக்கிரக தோஷங்கள் நீங்க

நவக்கிரக தோஷங்கள் நீங்க

சோதிடர்கள், மொத்தம் 9 கிரகங்களின் பயணத்தை(சஞ்சாரம்) வைத்தும் அவை எங்கெங்கு உள்ளதெனவும் கணித்து அந்தந்த கிரகத்திற்கு தோஷம் உள்ளதாவெனவும் கணித்து பலாபலன்கள் சொல்லி, அதற்குப் பரிகாரங்களும் சொல்வார்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே இன்னல் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நவகிரக கோயில்கள்

சூரியன் சூரியனார் சூரியனார்கோயில்
சந்திரன் கைலாசநாதர் திங்களூர்
செவ்வாய் வைத்தியநாதர் வைத்தீசுவரன்

கோயில்

புதன் சுவேதாரண்யேஸ்வரர் திருவெண்காடு
குரு ஆபத்சகாயேஸ்வரர் ஆலங்குடி
சுக்கிரன் அக்னீஸ்வரர் கஞ்சனூர்
சனி தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு
இராகு நாகநாதசுவாமி நாகநாதர் சன்னதி
கேது நாகநாதசுவாமி கீழ்ப்பெரும்பள்ளம்
  ஐராவதேஸ்வரர் மேலத்திருமணஞ்

சேரி

நவபாஷாண நவக்கிரகங்கள் தேவிபட்டிணம் இராமநாதபுரம்
சங்கரனார் பார்த்திபனூர் இராமநாதபுரம்
வரதராஜப்பெருமாள் கண்ணங்குடி கடலூர்
ஆதிகாமாட்சி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்

ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி

இடுகம்பாளையம்

கோயம்புத்தூர்

வைரவன் சுவாமி வைரவன்பட்டி சிவகங்கை
தேனுபுரீஸ்வரர் மாடம்பாக்கம் சென்னை
தலையாட்டி விநாயகர் ஆத்தூர் சேலம்
கம்பகரேசுவரர் திருப்புவனம் தஞ்சாவூர்
பிராணநாதேசுவரர் திருமங்கலக்குடி தஞ்சாவூர்
கோலவில்லி ராமர் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர்

குக்கி சுப்ரமண்யர்

குக்கி சுப்ரமண்யா

தட்ஷிண கன்னடா

ஆம்ரவனேஸ்வரர் மாந்துறை திருச்சி

பாலசுப்பிரமணியர்

சிவகிரி

திருநெல்வேலி

கைலாசநாதர் தென்திருப்பேரை திருநெல்வேலி
சூஷ்மபுரீஸ்வரர் திருச்சிறுகுடி, செருகுடி திருவாரூர்
கைலாசநாதர் இராஜபதி தூத்துக்குடி
வைத்தமாநிதி பெருமாள் திருக்கோளூர் தூத்துக்குடி
பூமிபாலகர் திருப்புளியங்குடி தூத்துக்குடி
மகரநெடுங் குழைக்காதர் தென்திருப்பேரை தூத்துக்குடி
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை தூத்துக்குடி
ஆதிநாதன் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி
சித்திரபுத்திர நாயனார் கோடாங்கிபட்டி தேனி
பிரம்மபுரீஸ்வரர் திருக்குவளை நாகப்பட்டினம்

 

நல்ல நண்பர்கள் கிடைக்க

நல்ல நண்பர்கள் கிடைக்க

ஒரு நல்ல நண்பன், எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான்.

உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.”

ஒருவேளை, தான் ஏதேனும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன் நண்பனும் உயர அவன் காரணமாக இருப்பான்.

இத்தகைய நட்பு கிட்ட கீழுள்ள ஆலயத்துள்ள இறைவனை வழிபடக் கிட்டும்.

சுந்தரேஸ்வரர் திருவேட்டக்குடி புதுச்சேரி