Category Archives: ஆலயங்கள்
என்னுடன் GOOGLE+ல் இணைய
என்னுடன் GOOGLE+ல் இணைய
https://plus.google.com/b/101327971826630766610/
நல்ல கணவன் கிடைக்க
நல்ல கணவன் கிடைக்க
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?
மனவியிடம் அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். கோபப்பட்டு மனது புண்படும்படி பேசக் கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் கோபிக்கக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்கக் கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். முக்கியமானவற்றை மனைவியிடம் கூறி கலந்து ஆலோசிக்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்(நியாயம் இருந்தால்). வித்தியாசமாக சமையல் ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும். பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். ஒளிவு மறைவு கூடாது. மனைவியை (நம்பவேண்டிய இடத்தில்) நம்ப வேண்டும். மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. முக்கியமாக மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. கைச் செலவுக்குப் பணம் தர வேண்டும். தன் மனைவியின் வளர்ச்சியில் பெருமை கொள்வதும், அவள் தன்னை விட திறமைசாலியாக இருந்தால் அதை ஒப்புக் கொள்ளத் தயங்காதவனாகவும் இருத்தல் வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளை அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்து கொடுத்து மனைவியை உடலாலோ மனதாலோ தொல்லை செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இத்தனையும் ஒருசேர உள்ள ஒரு கணவன் கிட்டுவானா? மிகவும் அரிது.
குடும்பம் ஒன்றுபட்டு, கணவனும் மனைவியும் ஒன்றாக வாழத் தேவை அன்பே. குடும்ப அமைப்பு என்பது மனைவியையோ, கணவனையோ கட்டுப் படுத்தவோ அடிமைப்படுத்தவோ உருவாக்கப்படவில்லை.
“உன்னுடைய கணவன் இராமனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. ஏனெனில்,
ராமனும் கூட ஒரு கட்டத்தில் தன் மனைவியை சந்தேகப்பட்டவன்தான். நல்ல மனிதனாக இருக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படு.”
“மனைவியை அதிகம் நேசித்தாலும் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்தான் நல்ல கணவன்” இது ஒரு சாரார் கருத்து.
சோதிடர்கள்கூறுவது: சுப கேந்திர திரிகோண ராசிகளில் லக்கினத்தில் சுபர்கள் அமையின் பண்புள்ள நல்ல கணவன் அமைவான். அங்கே பாவிகள் அமையினும், 6-8-12ல் சுபகிரகம் அமையினும் பண்பற்ற கெட்ட கணவன் அமைவான்.
தனக்குப் பொருத்தமான துணை வேண்டும் என்று தேடிக்கொண்டே போனால், உலகம் முழுதும் தேடினால் கூட கூட நீங்கள் தேடும் “பொருத்தமானவர்” கிடைக்கமாட்டார்.
உங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ற கணவனைத் தேடுங்கள். மேலே சொல்லபட்டிருக்கும் தகுதிகளில் ஒரு பத்துக்கு ஆறு தேறினாலும் பரவாயில்லை. மீதியை நீங்கள் அவர் மனைவியானபின் கற்றுக்கொடுங்கள். உங்களைத் தன் அன்பு மனைவியாக நேசிக்கும், எத்தருணத்திலும் கைவிடாத ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுங்கள். கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்துவர நல்ல கணவன் அமைவான்.
ஜம்புகேஸ்வரர் | திருவானைக்கா(வல்) | திருச்சி |
வண்ணாரப்பேட்டை– திருநெல்வேலி |
திருநெல்வேலி |