Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்மாவட்டம்.
+91- 4253 – 242 026 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வேலாயுதர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கிணத்துக்கடவு | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே” என்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் “வேலாயுத சுவாமி” என அழைக்கப்பட்டார்.
அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி
அருள்மிகு வேலாயுதர் திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4255- 266 515, 268 515,268 415
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
வேலாயுதர் |
|
உற்சவர் | – |
முத்துக்குமாரர் |
|
தீர்த்தம் | – |
சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
செஞ்சேரி |
|
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சூரபத்மன், தான் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அவனை சம்காரம் செய்து தேவகுலத்தைக் காக்க சிவபெருமான் முருகனைப் படைத்தார். முருகனும் அசுரனை அழிக்கக் கிளம்பினார். அப்போது அம்பாளுக்கு “சிறுவனான முருகன், சூரனை அழிக்கும் அளவிற்கு திறம் பெற்றவனா?” என்ற சந்தேகம் வந்தது. எனவே அம்பாள் சிவனிடம், “சூரன் போர் புரிவதில் வல்லவன். மாயைகள் செய்யக்கூடியவன். அவனது மாயைகளை சிறுவனான முருகன் வெல்வது எளிதாகுமா?” எனக் கேட்டாள். சிவன் அவளிடம், “முருகன் சூரனை அழிப்பதற்கென்றே அவதரித்தவன். அவன் இல்லாமல் வேறு யாராலும் சூரனை அழிக்க முடியாது” என்றார். ஆனாலும் பார்வதிக்கு மனம் கேட்கவில்லை. அவள் முருகன் மீதுள்ள பற்றால் போரில் அவனே வெற்றி பெற “மந்திர உபதேசம்” செய்யும்படி சிவனிடம் வேண்டினாள். அம்பாளின் வேண்டுதலுக்கு இசைந்த சிவன், முருகனிடம், “நீ போருக்கு செல்லும் வழியில் தர்ப்பை புற்கள் நிறைந்த ஓரிடத்தை காண்பாய். அங்கே ஒரு ஆறு ஓடும். அவ்விடத்தில் மலையின் வடிவில் நான் இருப்பேன். அருகில் உன் தாயார் ‘சக்திகிரி‘ என்ற பெயரில் மலையாக இருப்பாள். மேற்கே திருமாலும், கிழக்கே பிரம்மனும் பெரிய பாறை வடிவில் இருப்பர். அங்கே என்னை வேண்டித் தவம் இரு. நான் உனக்கு மந்திர உபதேசம் செய்கிறேன்” என்றார். அதன்படி சூரனை சம்காரம் செய்ய சென்ற முருகன் இத்தலத்திற்கு வந்தார். சிவனை வேண்டித் தவம் செய்தார். சிவன் அம்பாளுடன் அவருக்கு காட்சி தந்து, மந்திர உபதேசம் செய்தார். “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட அவரது ஆலோசனைப்படி சூரனை வென்றார் முருகன். பெற்றோர் பேச்சைக் கேட்கும் பிள்ளைகள் எதிலும் வெற்றியே பெறுவர் என்பதை எடுத்துக்காட்ட தோன்றியது இத்தலம்.