Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதராஜன்
உற்சவர் கல்யாண ரங்கநாதன்
தாயார் அமிர்த வல்லி
தீர்த்தம் இலாக்ஷ புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநகரி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் ஒளிந்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலிதிருநகரி ஆனது.

திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னனாகப் பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்– 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார் திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம் சந்திர புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணிக்கூடம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்எனச் சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேயத் தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாகச் சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாகக் காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.